கயிறு இழுத்தல் போட்டியில் இளைஞன் மரணம்; புத்தாண்டு கொண்டாட்டத்தில் துயரம்
புத்தளத்தில் கலாசாரப் நிகழ்வில் கயிறு இழுத்தல் போட்டியில் கலந்துகொண்ட இளைஞன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
புத்தாண்டு விளையாட்டுகளில் மகிழ்ச்சியாக ஈடுபட்டிருந்த இருபது வயது இளைஞர் ஒருவர், கயிறு இழுக்கும் போட்டியின் போது ஏற்பட்ட மாரடைப்பால் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
விளையாட்டுப் போட்டிகளில் மனைவியுடன் பங்கேற்ற இளைஞர்
உயிரிழந்தவர், கொஸ்வத்த, மிகஹாவெலவைச் சேர்ந்த சந்தூன் தாரக (25) என்ற திருமணமான ஆண் ஆவார்.
மிகஹாவெல இளைஞர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 4வது வருடாந்திர புத்தாண்டு விழா, 17ஆம் திகதி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் உயிரிழந்த சந்தூன் தாரக தனது மனைவியுடன் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருந்தார்.
சந்தூன் பங்கேற்ற அணி, கயிறு இழுத்தல் போட்டியின் முதல் சுற்றிலும் வெற்றி பெற்றிருந்தது. இறுதிச் சுற்றில் அவருக்கு இந்த விபத்து ஏற்பட்டது. மராவில ஆதார மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.
சட்ட வைத்திய அதிகாரி எம்.பி.எஸ். பீரிஸ், இந்த மரணம் திடீர் மாரடைப்பால் நிகழ்ந்ததாக உறுதி செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து கொஸ்வத்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.