;
Athirady Tamil News

ஜப்பான் அமைதி கொள்கை மாற்றம்: ஆயுத ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

0

ஜப்பான் அமைதி கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆயுத ஏற்றுமதிக்கான தடை நீக்கம்
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு எடுத்துக் கொள்ளப்பட்ட அமைதி கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் செய்யும் வகையில், செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக ஜப்பான் தனது நீண்டகால ஆயுத ஏற்றுமதி தடையை நீக்கியுள்ளது.

சீனா மற்றும் வட கொரியாவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சியின் அமைச்சரவையால் ஆயுத ஏற்றுமதி தடையை நீக்கம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அடுத்த தலைமுறை போர் விமானங்கள், அதிநவீன ட்ரோன்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப தாக்குதல் ஆயுதங்கள் என மேம்படுத்தப்பட்ட ராணுவ தளவாடங்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய முடியும்.

இதற்கு முன்னதாக கண்ணிவெடிகள் அகற்றுதல், கண்காணிப்பு, போக்குவரத்து, எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் அமைதிவாத அரசியலமைப்பு மீட்பு பணி ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளுக்கு மட்டுமே ஜப்பான் இராணுவ பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.