சாகரிக்கா ரயிலின் சாரதி உட்பட நால்வர் பணி இடைநீக்கம்
கடந்த 24 ஆம் திகதி தடம் புரண்ட ‘சாகரிகா’ தொடருந்தில் கடமையாற்றிய ஊழியர்கள் நால்வரின் சேவையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்குத் தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தொடருந்து திணைக்களத்தின் தகவல்படி, தொடருந்து ஓட்டுநர், உதவி ஓட்டுநர்,முதன்மைப் பொறுப்பதிகாரி , உதவிப் பொறுப்பதிகாரி ஆகிய அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தொடருந்து தடம் புரண்டமைக்கான காரணம் மற்றும் அதில் பணியாளர்களின் கவனக்குறைவு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.