;
Athirady Tamil News

மியான்மரில் மீண்டும் உள்நாட்டு போர் தீவிரம்: ராணுவத்தின் கை ஓங்குகிறது

0

நேபிடாவ்,

மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் தற்போது ராணுவத்தின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களிடம் பல இடங்களை இழந்த ராணுவம் தற்போது கட்டாய ராணுவச் சேர்க்கை மூலம் லட்சக்கணக்கான புதிய வீரர்களைத் திரட்டி, அதிரடி தாக்குதலைத் தொடங்க உள்ளது.

எதிர்ப்புப் படைகளிடையே நிலவும் ஒற்றுமையின்மை மற்றும் சீனாவின் நெருக்கடியால் கிளர்ச்சிக் குழுக்கள் பலவீனமடைந்துள்ளன. தனது பல கோடி ரூபாய் முதலீடுகளைப் பாதுகாக்க சீனா அமைதிப் பேச்சுவார்த்தையை வலியுறுத்துகிறது.

இதற்கிடையே, மியான்மர் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள மின் ஆங் ஹலைங், ஆயுதக் குழுக்கள் ஜூலை 31-க்குள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கொடூரப் போரில் இதுவரை 8 ஆயிரம் பொதுமக்கள் பலியாகியுள்ளனர். “போர் நின்றால் போதும்” என்று மக்கள் தவிக்கின்றனர். ராணுவத்தின் இந்த விஸ்வரூபத்தால் வரும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.