;
Athirady Tamil News

திருமண இசை கச்சேரியால் பறிபோன 140 உயிர்

0

லக்னோ,

இன்றைய காலக்கட்டத்தில் திருமணம், பிறந்த நாள் விழா என எந்த விழாவாக இருந்தாலும் டிஜே மியூசிக் (DJ Music) இல்லாமல் கொண்டாட்டமே இல்லை. காதை பிளக்கும் டிஜே சத்தம் இருந்தால் தான் இந்த விழாக்களே முழுமையடைகின்றன என்ற நிலைக்கு வந்து விட்டோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இதே நிலைமை தான். ஆனால், இந்த டிஜே-க்களால் வரும் சவுண்ட் தொல்லை ரொம்பவே அதிகம். வயதானவர்கள், சின்னக் குழந்தைகளுக்கு இந்த அதிக சத்தம் பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

இந்த பயங்கர சத்தம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் ஆபத்து என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது. பொதுவாக திருமண நிகழ்ச்​சி​யில் மாப்​பிள்ளை ஊர்​வலத்​தில் டிஜே எனும் இசைக் கச்​சேரி இடம்​பெறு​வது வழக்​கம். இந்​நிலை​யில் உத்தர பிரதேசம் சுல்​தான்​பூர் மாவட்​டம், தரி​யாபூர் கிராமத்​தில் கடந்த ஏப்​ரல் 25-ம் தேதி ஒரு திருமண ஊர்​வலம் டிஜே கச்சேரியுடன் நடை​பெற்​றது. அதில் கிளம்​பிய அளவுக்கு மீறிய சவுண்ட் அங்கு உள்ள ஒரு கோழிப்​பண்​ணை​யில் பெரும் பாதிப்பை ஏற்​படுத்தி உள்​ளது.

கச்​சேரி​யின் சவுண்டு தாங்​காமல் அங்கு இருந்த 140 கோழிகள் இறந்​துள்ளது. இது தொடர்​பாக தரி​யாபூர் காவல் நிலை​யத்​தில் கோழிப்​பண்ணை உரிமை​யாளர் சாபீர் அலி, புகார் அளித்​தார். இதையடுத்து உயி​ரிழந்த கோழிகளுக்​கான உடற்​கூறு ஆய்வு நடத்​தப்​பட்​டது. இதில் டிஜே இரைச்​சல் கோழிகளுக்கு பெரும் பீதியை ஏற்​படுத்​தி​ய​தாக​வும் இதனால் ஏற்​பட்ட மாரடைப்​பால் 140 கோழிகள் இறந்​த​தாக​வும் தெரிய​வந்​தது.

இதுகுறித்து உடற்​கூறு ஆய்வு நடத்​திய தலைமை கால்​நடை மருத்துவ அதி​காரி பிரமோத் சர்மா கூறுகை​யில், “திருமண ஊர்​வலத்​தின் டிஜே வாக​னம் கோழிப்​பண்​ணையை கடந்து சென்​ற​போது, அதிலிருந்து வெளி​யான உரத்த இரைச்​சலும் அதிர்​வு​களும் அங்​கிருந்த கோழிகளைப் பெரிதும் மிரளச் செய்​தது. இந்​தத் திடீர் பீதி காரண​மாக கோழிகள் மிரண்​டு​போய், கண் இமைக்​கும் நேரத்​தில் 140 கோழிகள் பட படவென உயி​ரிழந்​துள்​ளன.

மாரடைப்பு காரண​மாக உயி​ரிழந்த கோழிகளுக்​கு, உரத்த இரைச்சலும், அதனால் ஏற்​பட்ட மன அழுத்​தச் சூழலும் தாங்க முடி​யாமல் போய் உள்​ளது. இதுவே கோழிகளின் உயி​ரிழப்​புக்கு ஒரு முக்​கியக் காரண​மாக அமைந்​திருக்​கலாம் என்​றார்.

இந்த உடற்​கூறு ஆய்​வறிக்​கை​யின் அடிப்​படை​யில் டிஜே இசைக் கச்​சேரி நிர்​வாகி கவி யாதவ் மீது போலீ​சார் வழக்​குப் பதிவு செய்து வி​சா​ரணை நடத்தி வருகின்றனர். வினோத​மான இந்தப் புது​வித வழக்கு உ.பி.யில் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.