நள்ளிரவில் பற்றியெரிந்த தேயிலை தொழிற்சாலை ; பாரிய சொத்து சேதங்கள்
நுவரெலியா – ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரூட்சைட் தோட்டத்திற்குச் சொந்தமான தேயிலை தொழிற்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை (01) இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்தினால் தொழிற்சாலைக்கு பாரிய சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தீ விபத்துக்கான காரணம்
எனினும், எவருக்கும் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர், பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் ராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்