;
Athirady Tamil News

வெளிநாட்டவர்களின் நுழைவை நிறுத்த திட்டம்; அமெரிக்கா விமான நிலையங்க்களில் கட்டுப்பாடு

0

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அரசாங்கம், சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காத நகரங்களின் விமான நிலையங்களில் அனைத்துலகப் பயணிகளுக்கும் சரக்குகளுக்குமான குடிநுழைவு நடைமுறைகளை நிறுத்தத் திட்டமிடுவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் மார்க்வெயின் மலின் கூறியுள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்துக்குச் செவ்வாய்க்கிழமை (மே 26) அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது வெள்ளை மாளிகை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியதாகக் கூறிய மலின், குடிநுழைவு நடைமுறைகளை நிறுத்துவது பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.

அனைத்துலகப் பயணிகளுக்கான குடிநுழைவு, சுங்க நடைமுறைகளை நிறுத்த உள்துறை அமைச்சு முடிவெடுக்கக்கூடும் என்று திரு மலின் தனிப்பட்ட விதத்தில் அமெரிக்கப் பயண நிர்வாகிகளிடம் கூறியதாக ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் கடந்த வாரம் தகவல் வெளியிட்டன.

டென்வர், பிலடெல்ஃபியா, சிக்காகோ, லாஸ் ஏஞ்சலஸ், நியூயார்க், நியூவார்க், சியேட்டல், சான் பிரான்சின்ஸ்கோ ஆகியவற்றில் உள்ள விமான நிலையங்களில் அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று மலின் குறிப்பிட்டதாக அவைத் தெரிவித்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.