;
Athirady Tamil News

தென்கொரிய கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

0

தென்கொரிய கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

தென் கொரிய அரசு வெளியிட்ட அறிக்கையில், HMM Namu கப்பல் மீது ஈரான் தயாரித்த Noor வகை எதிர்க்கப்பல் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் பனாமா கொடியுடன் இயங்கினாலும், கொரியாவின் HMM நிறுவனம் இயக்கி வந்தது. மே 4 அன்று இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதில் ஒன்று வெடிக்காமல் போனது. மற்றொன்று வெடித்து கப்பலின் பின்புறம் கடுமையாக சேதப்படுத்தியது. 24 பணியாளர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

விசாரணையில், தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை பாகங்களில் “TEM-T05003” என்ற குறியீடு காணப்பட்டதாகவும், அது ஈரானின் Turbine Engineering Manufacturing நிறுவனத்துடன் தொடர்புடையதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஏவுகணையின் வண்ணம், இயந்திர அமைப்பு, Toloue-4 எனப்படும் ஈரான் தயாரித்த டர்போஜெட் என்ஜின் போன்ற அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

தென் கொரிய அரசு, ஈரான் தூதரை அழைத்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், ஈரான் தூதர் குற்றச்சாட்டுகளை மறுத்து, “இது எதிரி நாடுகளின் பொய்யான நடவடிக்கை” எனக் கூறியுள்ளார்.

ஹார்முஸ் நீரிணையில் இதுவரை 33 தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், கொரிய அரசு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.