பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; குடும்பஸ்தர் பலி
புத்தளம், கரம்பை – உடப்பு பிரதான வீதியின் சமீரகம பிரதேசத்தில் இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்ஸூம் மோட்டார் சைக்களிலும் நேருக்கு நேர் மோதியல் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளத்திலிருந்து கரம்பை ஊடாக கொத்தாந்தீவு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து புத்தளம் டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸூம், பெருக்குவட்டானில் இருந்து மதுரங்குளி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை உடனடியாக கொத்தாந்தீவு கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொத்தாந்தீவு பெருக்குவட்டானைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துடன் தொடர்புடைய இ.போ.ச பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.