;
Athirady Tamil News

நயினாதீவு கொடியேற்றம்

0

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ கொடியேற்றம் நாளைய தினம் திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று , எதிர்வரும் 28ஆம் திகதி காலை தேர் உற்சவமும் , மறுநாள் 29ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெறும்

மகோற்சவ காலத்தில் பக்தர்களின் பாதுகாப்பிற்கு தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் , மக்களுக்கான சேவைகள் உள்ளிட்டவற்றுக்கு சாரணர்கள் , சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையணியினர் உள்ளிட்டவர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர்

அத்துடன் மகோற்சவ காலத்தில் 42 படகுகள் சேவையில் ஈடுபடவுள்ளதுடன் , விசேட போக்குவரத்து சேவைகளில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளன.

அத்துடன் பக்தர்களுக்காக குடிநீர் தேவைப்பாடுகள், வைத்திய சேவை, சுகாதாரம், மின்சாரத் தேவை, அம்புலன்ஸ் சேவை என்பவையும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.