;
Athirady Tamil News

வேலைக்காக நேர்காணலுக்கு வந்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற காதல் கணவர்

0

பெங்களூரு,

நேர்காணலுக்கு வந்த மனைவியை காதல் கணவர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவ நடந்துள்ளது. மேலும் தப்பி ஓடாமல் சம்பவ இடத்திலேயே இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆவலஹள்ளி பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவரும், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவை சேர்ந்த யோகினி(21) என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பிறகு இருவரும் மாலூர் பகுதியில் வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். சில மாதங்கள் இருவரும் சந்தோஷ மாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். அப்போது யோகினியை, அவரது காதல் கணவர் கணேஷ் அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கணவர் அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்ததால்

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு யோகினி கணவரிடம் கோபித்துக் கொண்டு தன்னுடைய தாய் கல்பனா வீட்டுக்கு சென்றுவிட்டார். அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கணேஷ் பேசி சமரசம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.

மேலும் நேரில் சென்று அவரை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக தெரிகிறது. ஆனால் யோகினி கணவருடன் செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் யோகி தனக்கு வேலை தேடி வந்தார். அப்போது அவருக்கு கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா நரசாபுரா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு நேர்காணல் நடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் அந்த தனியார் நிறுவனத்துக்கு நேர்காணலுக்கு சென்றார்.

இதை அறிந்த அவரது கணவர் கணேஷ், நரசாபுரா தொழிற்பேட்டைக்கு நேரில் சென்று தனது மனைவி யோகினியை சந்தித்தார். பின்னர் சமரசம் பேச வேண்டும் என்று கூறி அவர், யோகினியை மீண்டஹள்ளி ஏரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கணேஷ், தான் தயாராக எடுத்து வந்திருந்த கத்தியால், மனைவி யோகினியை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த யோகினி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

அதையடுத்து யோகினியை கொலை செய்தது குறித்து தனது மாமியார் கல்பனாவுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கணேஷ் தகவல் தெரிவித்தார். அதைக்கேட்ட கல்பனா பதறிப்போனார். பின்னர் அவர் இதுபற்றி மாலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அவ ரும் மீண்டஹள்ளி ஏரிப்பகுதிக்கு குடும்பத்தினருடன் விரைந்து வந்தார்.

இந்த நிலையில் அங்கு வந்த போலீசார் யோகினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய் துவிட்டு கணேஷ் அங்கேயே இருந்தார். அவர் தப்பி ஓடவில்லை. போலீசார் வந்ததும், அவர் சரண் அடைந்தார். அதையடுத்து போலீசார் கணேஷ் மீது கொலை வழக்குப்ப திந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.