;
Athirady Tamil News

நோர்வே இளவரசியின் வியப்பை ஏற்படுத்தும் செயல் ; நுரையீரல் மாற்று சிகிச்சைக்காக இப்படியா

0

நார்வே நாட்டு இளவரசி மெட்டே மேரிட், 52, சாதாரண பொதுமக்கள் போல் காத்திருப்போர் பட்டியலில் இருந்து, நுரையீரல் தானமாக பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

ஐரோப்பிய நாடான நார்வேயின் அடுத்த மன்னராக பொறுப்பேற்கவுள்ள இளவரசர் ஹாகனின் மனைவிதான் மெட்டே – மேரிட். இவருக்கு கடந்த 2018ம் ஆண்டே ‘பல்மோனரி பைப்ரோசிஸ்’ எனப்படும் அரிய வகை நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு நோய் கண்டறியப்பட்டது.

கடந்த 6 மாதங்களாக இளவரசியின் உடல்நிலை மிக மோசமடைந்தது. ‘ஆக்சிஜன் சிலிண்டர்’ உதவியோடுதான் அவர் நடமாடி வந்தார்.

இனி நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் ஒரே வழி, இல்லையெனில் உயிருக்கே ஆபத்து என்ற கட்டாயத்திற்கு டாக்டர்கள் வந்தனர்.

இதையடுத்து, கடந்த ஜூன் 5ம் தேதிதான் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான காத்திருப்போர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக, மிகக் குறுகிய நாட்களிலேயே அவருக்குப் பொருத்தமான நுரையீரல் உறுப்பு தானமாகக் கிடைத்து அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.