;
Athirady Tamil News

சூடானுக்கு சப்ளை; இந்திய வெடிபொருள் நிறுவன நிர்வாகி மீது பொருளாதார தடை

0

வாஷிங்டன்,

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே பயங்கர உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்த போரினால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகி உள்ள னர்.

இந்த நிலையில், சூடான் உள்நாட்டுப் போரை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் சில வெளிநாட்டு நிறுவனங்கள் ரகசியமாக ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் சப்ளை செய்து வருவதாக அமெரிக்க உளவுத்துறைக்கு அதிர்ச்சித் தகவல் கிடைத்தது

இதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இந்தியாவின் சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த ‘எஸ்.பி.எல். எனர்ஜி’ என்ற வெடிபொருள் தயாரிப்பு நிறுவனத்திற்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (சி.இ.ஓ.) அலோக் சவுத்ரி என்பவர், சூடான் ராணுவத்திற்கு சொந்தமான ஆயுதக் கிடங்குக ளுக்கு 200-க்கும் மேற்பட்ட முறை வெடிபொருட்களை கடத்தி சப்ளை செய் ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, போரைத் தூண்டிவிடும் செயலில் ஈடுபட்ட இந்திய சி.இ.ஓ. அலோக் சவுத்ரி, அவரது நிறுவனம் மற்றும் எகிப்து கொலம்பியா நாடுகளைச் சேர்ந்த இடைத்தரகர்கள் உள்பட மொத்தம் 8 பேர் மீது அமெரிக்க அரசு தற்போது அதிரடியாகப் பொருளாதாரத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.