;
Athirady Tamil News

வெனிசுவேலா நிலநடுக்கம்: அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!

0

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பேர் மாயமான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை (ஜூன் 24) வெனிசுவேலாவில் ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் அங்குள்ள கட்டடங்கள் சேதமடைந்தன.

இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியானதாகவும் லட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில், நாளுக்கு நாள் பலி எண்ணிக்கைகள் அதிகமாகிக் கொண்டே உள்ளது. மீட்புப்பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னதாக, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 146 பேர் வெனிசுவேலாவின் லா குவைரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். 7 குழந்தைகள், 19 பெண்கள் உள்பட மொத்தம் 146 வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த அகதிகள் அந்த விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்கள் அங்கு வந்து சேர்ந்த சில மணி நேரங்களிலேயே இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் அந்த விடுதிக் கட்டடமும் இடிந்து தரை மட்டமானது.

கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், மாயமான நூற்றுக்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.