புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு (படங்கள்)
புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு இன்றையதினம் இப்பாடசாலையின் அதிபர் திருமதி.வனிதா அருட்செல்வன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பாடசாலையில் குருளைச் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு, சிங்கிதி சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு, வான் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு போன்றவை முறையே திருமதி.பி.அருள்சந்திரன் (குருளைச் சாரணர் உதவி மாவட்ட ஆணையாளர்), திரு.ம.ஞானசம்பந்தன் (சிங்கிதி சாரணர் உதவி மாவட்ட ஆணையாளர்), திரு.ந.மஞ்சுதன் (1, 2 சாரணர் உதவி மாவட்ட ஆணையாளர் தீவகவலையம்) ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
இன்றையதினம் (25.07.2026) காலை விருந்தினர்கள் ஆலய முன்றலில் இருந்து அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், சாரண மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா இனிதே நடைபெற்றது.
