;
Athirady Tamil News

நாட்டில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்! அதிகரிக்கும் மரணங்கள்

0

இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளது என்றும், இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது என்றும் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த மாதத்தில் மாத்திரம் (ஜூலை 24ஆம் திகதி வரை) 25 ஆயிரத்து 530 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு மரணம்
இந்த ஆண்டில் இதுவரை பதிவான தரவுகளின் அடிப்படையில், அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவான மாவட்டங்கள் வருமாறு,

01. கம்பஹா மாவட்டம் – 17,135 நோயாளர்கள் (அதிகபட்சம் 02. கொழும்பு மாவட்டம் – 16,140 நோயாளர்கள் 03. மாத்தறை மாவட்டம் – 5,574 நோயாளர்கள்

மாகாணங்களின் அடிப்படையில் பதிவான பாதிப்புகள் வருமாறு,

01. மேல் மாகாணம் – 42,835 நோயாளர்கள் (அதிகளவான பாதிப்பு) 02. தென் மாகாணம் – 12,260 நோயாளர்கள் 03. மத்திய மாகாணம் – 6,924 நோயாளர்கள்

டெங்கு நோய்ப் பரவலைக் தீவிரமாகக் கட்டுப்படுத்தப் பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுப்புறங்களைத் தொடர்ந்து தூய்மையாகப் பேணிப் பாதுகாக்குமாறு சுகாதாரப் பிரிவினர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.