;
Athirady Tamil News

விளையாட்டு மைதானத்தில் கிடந்த மனிதத் தலை: திகிலை ஏற்படுத்திய சம்பவம்

0

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், விளையாட்டு மைதானம் ஒன்றில் மனிதத் தலை ஒன்று கிடந்த விடயம் திகிலை உருவாக்கியுள்ளது.

திகிலை ஏற்படுத்திய சம்பவம்
கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில், இன்று காலை விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு விளையாடச் சென்ற சிலர் அங்கு மனிதத் தலை ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

யாரோ ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் பரவ, அந்த பகுதியில் அச்சம் பரவியுள்ளது.

இதற்கிடையில், நேற்றிரவு, ரயில் பாதையில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரது உடல் கிடப்பதாக தகவல் கிடைக்க, பொலிசார் அந்த உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர். அந்த உடலில் தலையில்லை!

இந்தப் பக்கம் ஒருவரது தலை கிடைத்த நிலையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவர, ரயில் பாதையில் கிடைத்த உடலும், விளையாட்டு மைதானத்தில் கிடைத்த தலையும் ஒரே நபருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

மேலும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல் என்னவென்றால், அந்த நபர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்வதற்காக ரயில் பாதையில் படுத்துக்கொண்டிருக்கிறார்.

ரயில் மோதிய வேகத்தில், அவரது தலை துண்டிக்கப்பட்டு, சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் அந்த விளையாட்டு மைதானத்தில் போய் விழுந்துள்ளது!

இந்த பயங்கர சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.