;
Athirady Tamil News

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் வரலாற்றுச் சிறப்புமிக்க பேரிச்சம் பழ அறுவடை

0
அம்பாறை மாவட்டம் ஒலுவில் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் வகையில்  ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் வளாகத்தில் நடப்பட்டிருந்த பேரீச்ச மரத்திலிருந்து முதன்முறையாகப் பேரிச்சம் பழங்கள் அறுவடை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இன்று (31)  சிறப்பாக நடைபெற்றது.

சுமார் மூன்று தசாப்த கால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு  பள்ளிவாயல் வளாகத்தில் காய்த்துப் பழுத்துள்ள இந்த அருள் நிறைந்த பேரீச்சம்பழங்கள்  ஊர் மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019.02.04 ஆம் திகதி, நாட்டின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒலுவில் BSD (2002 – O/L) அமைப்பின் ஏற்பாட்டில்  பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத்தின் ஆலோசனைக் கமைய சுமார் 10 பேரீச்ச மரங்கள் நடப்பட்டன.

அதில் ஒரு மரத்தில் காய்த்துப் பழுத்த அருள்மிக்க பேரீச்சம் பழங்கள்  இன்று   வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும்   இன்று (31) ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 5 பழங்கள் கொண்ட ஒரு பைக்கட் (Packet) ரூபா 1,000/- எனும் நன்கொடை அடிப்படையில் பள்ளிவாயலின் வளர்ச்சிக்காக விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.சுமார் மூன்று தசாப்தங்கள் கடந்து, பள்ளிவாயல் வளாகத்தில் விளைந்துள்ள இந்த அருள் நிறைந்த பேரிச்சம்பழங்களை ஊர் மக்கள் சுவைத்து மகிழ வேண்டும் என்ற உயரிய நோக்கில் பள்ளிவாயல் நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

எமது ஊர் மண்ணில்  இறைவனின் மாளிகையிலேயே காய்த்துப் பழுத்த இந்த அருள்மிக்க பேரிச்சம் பழங்களை  பள்ளிவாயலின் வளர்ச்சிக்கான மேலான நன்கொடைகளைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். குறைந்த அளவிலான பழங்களே உள்ளதால் முந்துபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகம் கேட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.