;
Athirady Tamil News

தகாத உறவு ; கணவனை கொன்று 12 அடி ஆழத்தில் புதைத்த மனைவி ; இரண்டு ஆண்டுகளுக்கு பின் காத்திருந்த ஷாக்

0

குஜராத் மாநிலத்தில் கணவர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து வருவதாக இரண்டு ஆண்டுகளாக உறவினர்களை நம்ப வைத்த மனைவி, காதலனுடன் சேர்ந்து கணவரை விஷம் வைத்து கொலை செய்து தொழிற்சாலையில் புதைத்தது அம்பலமாகியுள்ளது.

குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது கணவர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து வருவதாக உறவினர்களிடம் கூறி வந்துள்ளார்.

விசாரணை
இந்நிலையில், கணவனின் உறவினர் ஒருவர் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டதால், முகவரி மற்றும் தொடர்பு எண்ணை கேட்டுள்ளார். அதற்கு மனைவி முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியிருக்கிறார்.

இதனால் சந்தேகம் அடைந்த, தனது சகோதரரை காணவில்லை என நபர் ஒருவர் பொலிஸில் புகார் அளித்தார்.

அதன்படி வழக்குப் பதிவு செய்த பொலிசார், ஜிக்னேஷை கண்டுபிடிக்க விசாரணையைத் தொடங்கினர்.

அதில் திருமணத்திற்கு முன்பிருந்தே நிலேஷ் என்பவருடன் பிரித்விக்கு காதல் தொடர்பு இருந்ததும், திருமணத்திற்குப் பிறகும் அந்த உறவு தொடர்ந்ததும் தெரியவந்துள்ளது.

தங்களது உறவுக்கு தடையாக இருந்த கணவனை தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டதாகவும், அவர் அருந்திய மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும் , உடலை சுமார் 12 அடி ஆழமாக குழிதோண்டி புதைத்துவிட்டதாகவும், அதன்பின் அவர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து வருவதாக இரண்டு ஆண்டுகளாக உறவினர்களை நம்ப வைத்ததாகவும் கூறியுள்ளார்.

பிரித்வி கூறிய கதையைக் கேட்டு அரண்டு போன பொலஸார் புதைக்கப்பட்டதாக அவர் கூறிய தொழிற்சாலை வளாகத்திற்கு சென்று எலும்புக்கூடுகளைத் தோண்டி எடுத்து, டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.