செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட சிறுவர் ஒருவருடைய என்புக்கூடு முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான கடந்த 24ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அந்நிலையில் இன்றைய தினம் 43ஆம் நாள் அகழ்வு பணியின் போது, 04 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 2 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஒரு மனித என்புக்கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட என்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மழை அங்கியும், அதனுடன் மீட்கப்பட்ட பொத்தான்களும், காலுறையும் சான்று பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு, நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 97 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 483 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 481 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.