;
Athirady Tamil News

யாழில். பறிமுதல் செய்யப்பட்ட கடலட்டைகள் 19 இலட்சத்திற்கு ஏலத்தில் விற்பனை

0
யாழ்ப்பாணத்தில் இருந்து உரிய அனுமதி பத்திரங்களின்றி , சட்டவிரோதமான முறையில் எடுத்து செல்லப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு , 11 இலட்சத்து , 19ஆயிரத்து 960 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 
மண்டைதீவு பகுதியில் இருந்து , உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் பட்டா ரக வாகனத்தில் 3ஆயிரத்து 111 கடல் அட்டைகளை எடுத்து சென்ற இருவரையும் கைது செய்த கடற்படையினர் , கைதான இருவரையும் , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கடலட்டைகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.
அதனை அடுத்து , கைதான இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ள கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் , மீட்கப்பட்ட கடலட்டைகளை 11இலட்சத்து 19ஆயிரத்து 960 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்துள்ளனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.