;
Athirady Tamil News

நுவரெலியாவில் நிலவும் வெள்ள அபாயம்; வெளியேற்றப்படும் வாவி நீர்

0

நுவரெலியா கிரகரி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிலகரித்துள்ளதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு முதல் வாவியின் வான்கதவு திறக்கப்பட்டு பெருமளவு நீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்படுகிறது.

பெய்துவரும் தொடர் மழையினால் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவும் , அணையின் பாதுகாப்பைக் கருதியும், நிர்ணயிக்கப்பட்ட கொள்ளளவுக்கு மேல் நீர் நிரம்பியதன் காரணமாகவும் கிரகரி வாவியின் வான் கதவு திறக்கப்பட்டு தொடர்ச்சியாக நீர் வெளியேற்றப்படுகிறது.

நுவரெலியா சென்/அன்றுஸ் மற்றும் ரேஸ்கோர்ஸ் கிராமத்தில் சிறிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு பல குடும்பங்களைச் சேர்ந்த பொது மக்கள் இரண்டு தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக, நுவரெலியா கிரகரி வாவியில் படகு சவாரிக்கு அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது. நுவரெலியாவில் மழை குறைந்த பின் படகுகளில் செல்ல வழக்கம் போல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபடுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.