;
Athirady Tamil News

பிளாக்வாட்டர் நதிப் பள்ளத்தாக்கில் பிரம்மாண்டமான எஸ்டேட்களை வாங்கிய மெட்டா நிறுவனர்

0

டப்ளின்,

மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் அயர்லாந்தின் வாட்டர்போர்ட் கவுண்டியில் அமைந்துள்ள பிளாக்வாட்டர் நதிக்கரையில் உள்ள 440 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஸ்ட்ரான்கேலி கோட்டையை தோராயமாக ரூ.20 மில்லியன் முதல் ரூ.30 மில்லியன் வரை கொடுத்து தனியுரிம ஒப்பந்தம் மூலம் வாங்கியுள்ளனர்.

சர்வதேச தலைமையகம்
1830-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த காதிக் பாணி மாளிகையானது சமையலறையில் இருந்து உணவருந்தும் அறைக்கே 4 நிமிடங்களுக்கு மேல் நடக்கும் அளவிற்கான பிரம்மாண்டமான பரப்பளவை கொண்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் சர்வதேச தலைமையகம் அயர்லாந்தின் டப்ளின் நகரில் செயல்பட்டு வரும் நிலையில், அயர்லாந்து நாட்டிற்கு வருகை தரும்போது தங்குவதற்கான மையமாக இந்த வரலாற்று வீட்டை அவர்கள் பராமரிக்க உள்ளனர்.

3-வது தொழில்நுட்ப கோடீஸ்வரர்
இதன் மூலம், 2021-க்குப் பிறகு அயர்லாந்தின் பிளாக்வாட்டர் நதி பள்ளத்தாக்கில் பெரிய அளவிலான பிரம்மாண்டமான எஸ்டேட்களை வாங்கிய 3-வது தொழில்நுட்ப கோடீஸ்வரராக மார்க் ஜூக்கர்பெர்க் இணைந்துள்ளார்; முன்னதாக 2021-ல் ‘ஸ்ட்ரைப்’இணை நிறுவனர் ஜான் காலிசன் அபே லைக்ஸ் எஸ்டேட்டையும், 2024-ல் பிரபல தொழிலதிபர் ஜேம்ஸ் டைசன் பாலிநாட்ரே மாளிகையையும் இதே நதி பள்ளத்தாக்கு பகுதியில் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.