;
Athirady Tamil News

சூப்பர்மேன் ஆடையில் காட்டுத்தீயை அணைக்கும் 17 வயது சிறுவன் ; சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

0

இந்தோனேசியாவில் சூப்பர்மேன் ஆடை அணிந்தபடி காட்டுத்தீயை அணைக்கும் 17 வயதுச் சிறுவன் ஒருவர் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறார்.

இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் காட்டுத்தீயால் பெருமளவு நிலம் கருகியுள்ள நிலையில், ருடியான்சா (Rudiyansah) என்னும் பாடசாலை மாணவன் பாடசாலை முடிந்த பிறகு தீயணைப்புப் பணியில் தொண்டூழியராக ஈடுபட்டு வருகிறான்.

அவனுடைய தந்தை தொடங்கிய தொண்டூழியக் குழுவில் 2023ஆம் ஆண்டு முதல் அவன் இணைந்துள்ளார்.

இந்த ஆண்டு முதல் தனக்குப் பிடித்த சூப்பர்மேன் ஆடையை அணிந்தபடி தீயை அணைக்கத் தொடங்கியுள்ளான்.

“அது வெறும் வேடிக்கைக்காகத்தான்,” என்று ருடியான்சா கூறுகிறார். ஆனால், தீயை அணைக்கும் அவரது காணொளி சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைக் கவர்ந்துள்ளது.

இவனது சேவையைப் பாராட்டி இந்தோனேசிய வனத்துறை அமைச்சர் அவரைக் “காட்டின் நாயகன்” என்று பாராட்டியுள்ளார்.

“மிகவும் சோர்வாக இருந்தாலும், மக்களுக்கு உதவ முடிவது மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று அவர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.