;
Athirady Tamil News

சாவகச்சேரியில் அமைக்கப்பட்ட “ஆறுதல்” வாழ்வு நிறைவுப் பராமரிப்பு இல்லத்தை திறந்து வைத்தார் சுகாதார அமைச்சர்!

0
யாழ்ப்பாணம், சாவகச்சேரி சரசாலை கனகன்புளியடி சந்திக்கு அருகிலுள்ள ஐந்து சந்திப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள “ஆறுதல் – வாழ்வு நிறைவுப் பராமரிப்பு இல்லம்” (Comfort Care Home Hospice) இன்றைய தினம் சனிக்கிழமை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இரமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளவர்களுக்குப் பராமரிப்பு, ஆறுதல் மற்றும் ஆதரவை வழங்கும் நோக்கில் இந்த இல்லம் அமைக்கப்பட்டுள்ளது

‘ஆறுதல்’ வாழ்வு நிறைவுப் பராமரிப்பு நிறுவனம்.

தென்மராட்சி சாவகச்சேரி சரசாலை வீதியில் கனகன்புளியடிச் சந்திக்கு அருகில் 1.2 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக இருபது தனி அறைகள் கொண்ட தங்குமிடங்கள், கட்டடங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் பூங்காக்களுடன் அமைக்கப்பட்டுள்ளது

தனித்துவிடப்பட்ட மனிதர்கள், புற்றுநோய் போன்ற கடுமையான குணப்படுத்த முடியாத நோய்களால் வாடுவோர், வலிகளைத் தணித்துத் தமது வாழ்வை நிறைவு செய்வதற்குரிய மருத்துவ மற்றும் சமூகச் சூழல் இங்கு இலவசமாக வழங்கப்படவிருக்கின்றது.

உலகளாவிய நிலையில் வாழும் தாயகம் மீதான ஈர்ப்பைக் கொண்டுள்ள ஏழு பெருந்தகைகள் இதன் நிறுவுனர்களாகத் திகழ்கின்றனர்.

இவர்களுடன் ஆறுபேர் சேர்ந்து பதின்மூன்று பேருடன கூடிய நம்பிக்கைப் நிதியத்தால் இந்நிலையம் நிர்வகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.