;
Athirady Tamil News

ஈரானில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 11 பேர் பலி

0

மேற்கு ஈரானில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 11 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் குர்திஷ் நகரமான சனந்தாஜ் அருகே உள்ள போக்குவரத்து காவல் நிலையம் அருகே, டேங்கர் லாரி மற்ற கார்கள் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததாக ஐ.ஆர்.என்.ஏ ஊடகம் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

லாரியின் பிரேக் பழுதானதே இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 11 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டில், சனந்தாஜ் அருகே எரிபொருள் டேங்கர் லாரியும் பயணிகள் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் பலியாகினர்.

ஈரானில் ஆண்டுதோறும் ஏற்படும் சாலை மற்றும் போக்குவரத்து விபத்துகளில் 17,000-க்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.