;
Athirady Tamil News

10 கைதிகளுடன் நாமல்; மோசமடையும் சூழல்; அநுரவின் அதிரடி பாய்ச்சல்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிறைச்சாலையில் எந்தவிதமான உடல் பாதிப்புகளும் இல்லை என சிறைச்சாலைத் தரப்புகள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணையின் அடிப்படையில் கடந்த 4ஆம் திகதி நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.

சுமார் ஐந்து மணிநேர விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறைச்சாலைத் தரப்பின் தகவலின்படி, அவருக்கு விசேட சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏனைய 10 கைதிகளுடன் வழமையான சிறைச்சாலை நடைமுறைகளுக்கு அமையவே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு விவகாரத்துடன் தொடர்புடையதாகும்.

2012–2013 காலப்பகுதியில் இடம்பெற்ற விமானக் கொள்வனவு ஒப்பந்தங்களில் இலஞ்சப் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அவரது கைது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

விசாரணைகளில் வெளிநாடுகளின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் ‘கிறிஸ்’ (Krrish) விவகாரங்களுடன் தொடர்புபடுத்தப்படும் பணப் பரிமாற்றங்கள் நன்கொடைகள் எனவும், அவற்றை இலஞ்சமாகக் கருத முடியாது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.