இலங்கையில் வாகன இலக்கத் தகடுகளில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிறத்திலான இலக்கத் தகடுகள் வழங்கப்படவுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு வழங்கப்படும் பச்சை நிற இலக்கத் தகடுகள் சட்டப்பூர்வமானவை என மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயக துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஏனைய வாகனங்களுக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களிலான இலக்கத் தகடுகள் வழங்கப்படும். மேலும் பதிவு செய்யப்பட்ட 88,740 வாகனங்களுக்கான புதிய இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாகன இலக்கத் தகடுகள்
ஜூன் மாதம் 10 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை பதிவு செய்யப்பட்ட 56,233 இலக்கத் தகடுகளும் அவற்றுள் அடங்கும் என மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயக துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு ஆகிய இரண்டு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 32,507 வாகனங்களின் இலக்கத் தகடுகளும் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
வாகன உரிமையாளர்கள் நாராஹேன்பிட்டி மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகத்திற்கு வந்து தமது வாகன இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.