விமான நிலையத்திலிருந்து சென்ற வாகனம் கோர விபத்து; தெய்வாதீனமாக தப்பிய நபர்கள்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (07) காலை பயணித்த சொகுசு கார் ஒன்று வீதியிலிருந்து விலகி பாதுகாப்பு வேலியில் மோதியதில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து தொடங்கொட பகுதியில் 32.4 கிலோமீட்டர் மைல்கல் அருகே இடம்பெற்றுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த கார், வீதி பராமரிப்புப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகளில் மோதிய பின்னர் மையப் பாதுகாப்பு வேலியில் மோதியதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
விபத்தில் பாதுகாப்பு வேலி மற்றும் வீதி பராமரிப்புத் தடுப்புகள் சேதமடைந்ததுடன், சொகுசு காரும் பலத்த சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.