;
Athirady Tamil News

‘சீனாவும், அமெரிக்காவும் போட்டியாளர்களாக இல்லாமல் கூட்டாளிகளாக இருக்க வேண்டும்’ – ஜி ஜின்பிங்

0

வாஷிங்டன்,

சீன அதிபர் ஷி ஜின்பிங் 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்றைய தினம் மேரிலாண்ட் விமான நிலையம் சென்றடைந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான் ஆகியோரை, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.

இந்நிலையில் சீனாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கான சரியான வழியைக் கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“சீனாவும், அமெரிக்காவும் போட்டியாளர்களாக இல்லாமல், கூட்டாளிகளாக இருக்க வேண்டும். இனிவரும் புதிய காலகட்டத்தில், இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான சரியான வழியை நாம் கண்டறிய முடியும். சீனாவும், அமெரிக்காவும் சிறந்த நாடுகள். இருநாட்டு மக்களும் சிறந்த மக்கள்.

கடந்த மே மாதம் டிரம்ப் சீனாவிற்கு வருகை தந்திருந்தபோது, ​​இரு நாடுகளுக்கும் இடையே ‘மூலோபாய ஸ்திரத்தன்மை’ (strategic stability) கொண்ட உறவை உருவாக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம். இது இருதரப்பு உறவுகளின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.

சீனாவும், அமெரிக்காவும் ஒரே திசையில் பயணிக்க வேண்டும். அமெரிக்க மற்றும் சீன மக்களிடையே நீண்டகாலமாக நட்புறவு நிலவி வருகிறது. இரு நாடுகளின் நலன்களும் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளன.

சீன தேசத்தின் மகத்தான மறுமலர்ச்சியும், ‘அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுதல்’ (Making America Great Again) என்ற நோக்கமும் ஒன்றிணைந்து செயல்படக்கூடியவை. இவை ஒன்றுக்கொன்று துணையாக அமைந்து உலகிற்கு நன்மை அளிக்கக்கூடியவை.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.