“பெண் தலைமைத்துவக் குடும்பங்களைத் தொழில் முனைவோராக மாற்றிப் பிரதேச அபிவிருத்திக்கு வழிவகுப்பதே எமது அடுத்த வருட நோக்கம்!” – அமைச்சர் சரோஜா
;
மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்தில் இருக்கின்ற மாவட்ட அதிகாரியும் சில பிரச்சினைகளை முன்னெடுத்து வைத்தார். அதேபோல எங்களுடைய மகளிர் அபிவிருத்தி நிலையங்கள், தற்காலிகப் பாதுகாப்பு நிலையங்களாக இருக்கின்ற மகளிர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள், நன்னடத்தை நிலையங்கள் தொடர்பாகவும் அடுத்த வருடத்தில் மேலதிக கவனத்தைச் செலுத்த வேண்டும். இங்கே ஆளணிப் பற்றாக்குறை இருக்கின்ற இடங்கள் பற்றியும் நாம் சிந்தித்து வருகிறோம்.
பெண் தலைமைத்துவக் குடும்பங்களை வலுவூட்டுவதற்கும், வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், அவர்களைத் தொழில் முனைவோர்களாக ஊக்குவிப்பதற்காகக் கடன் வசதிகளையும், பயிற்சிகளை வழங்கி, அவர்களைப் தொழில் முனைவோர்களாகக் கட்டியெழுப்பி பிரதேச அபிவிருத்திக்கான வழிவகுத்தல் எங்களுடைய அடுத்த வருட நோக்கமாக இருக்கின்றது – என்றார்