;
Athirady Tamil News

நள்ளிரவில் யாழை உலுக்கிய சம்பவம் ; இளம்பெண்ணை கொன்று விட்டு இளைஞன் செய்த விபரீதம் ; தாய்க்கு நேர்ந்த பெரும் கொடூரம்

0

யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த பின் அப்பெண்ணின் தாயாரை கத்தியால் குத்தி படுகாயத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் புகையிரதம் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.

கோவில் வீதியில் உள்ள வீடொன்றினில் அத்துமீறி நுழைத்த இளைஞன் வீட்டில் இருந்த இளம்பெண் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதேவேளை குறித்த பெண்ணின் தாயார் மீதும் இளைஞன் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டதில், தாயார் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து தப்பி சென்று அரியாலை பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதம் முன் பாய்ந்து உயிரை மாய்ந்துள்ளான் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.