;
Athirady Tamil News

4 வயது சிறுவனை பலியெடுத்த விபத்து

பாதுக்கை - கொழும்பு வீதியில் லியன்வல சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பின்னவலை பிரதேசத்தைச் சேர்ந்த 4 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருள் சிக்கியது

சுமார் 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரை களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் பாணந்துறை அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. மேலதிக…

பிரதமர் மோடியின் இலங்கை வருகையை உறுதி செய்த இந்தியா!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை குறித்து இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்திய பிரதமர் ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை பயணிப்பார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள…

மதுபோதையில் பேருந்தை செலுத்தியவருக்கு ஓட்டுநர் உரிமம் வாழ்நாள் ரத்து

மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதவான் சம்பிகா ராஜபக்ஷ உத்தரவிட்டார். அதற்கு மேலதிகமாக ரூ. 40,000 அபராதமும் விதிக்கப்பட்டது. வேதநாகம்…

தென் கொரிய காட்டுத் தீ: அதிகரிக்கும் உயிர்ப் பலிகள்…போராடும் வீரர்கள்!

தென் கொரியா நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டு தீயணைப்புப் படையினர் போராடி வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தென் கொரியாவின் தென்கிழக்குப் பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலை மற்றும்…

கொதிக்கும் பால் பானைக்குள் விழுந்து பலியான பச்சிளம் குழந்தை

ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்டத்தில் உள்ள அக்மா பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தை சரிகா, வீட்டின் சமையலறையில் கொதிக்கும் பால் நிறைந்த பானைக்குள் தவறி விழுந்துள்ளார். பூனையை பார்த்து குழந்தை பயந்து ஓடியபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்து…

வாழைச்சேனை விற்பனை நிலையத்தில் பாரிய தீ

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு பிரதான வீதி மாவடிச்சேனையில் அமைந்துள்ள மின்சாரப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த தீ விபத்துச் சம்பவம் (28) அதிகாலை 12.30 மணியளவில்…

யாழில். மாணவியை தடியால் அடித்த குற்றத்தில் ஆசிரியர் கைது

பாடசாலை மாணவி ஒருவரை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 கற்கும் மாணவிக்கே அடித்ததாக குற்றம்…

இஸ்ரேலின் தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 6 பாலஸ்தீனர்கள் பலி!

காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். வடக்கு காஸாவின் ஜபாலியா பகுதியில் அப்தெல்-லத்தீஃப் அல்-குவானோவா என்பவர் தங்கியிருந்த முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில்…

உத்தர பிரதேசம்: மறுவாழ்வு மையத்தில் 4 குழந்தைகள் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் மறுவாழ்வு மையத்தில் வழங்கிய உணவை உட்கொண்ட 4 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். உணவில் நச்சுத்தன்மை இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை 20-க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கு…

கொழும்பில் வெடித்த போராட்டம் : அதிரடியாக கைது செய்யப்பட்ட 27 பேர்

சுகாதார அமைச்சிற்கு முன்பாக இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் ஒன்றியம் முன்னெடுத்த சத்தியாகிரக போராட்டத்தின் போது 27 பேர் மருதானை (Maradana) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று இரவு (27.03.2025)…

போர்ப்பதற்றத்தை உருவாக்கியுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி: என்ன கூறியுள்ளார்?

ஏதாவது ஒரு பக்கத்திலிருந்து, யாராவது ஒரு உலகத் தலைவர் போர்ப்பதற்றத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். உக்ரைன் ரஷ்ய ஊடுருவலாகத் துவங்கிய விவகாரம், இன்று உலக நாடுகளை இரண்டு அணிகளாக நிறுத்தியுள்ளது. யார் எப்போது பிரச்சினையை…

பௌத்த தேரரின் கொடூர படுகொலை! விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்

அனுராதபுரம், எப்பாவல, பகுதியில் வசித்து வந்த பௌத்த தேரர் ஒருவர் கொடூரமான கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். பொலிஸ் விசாரணைகளின்படி, குறித்த தேரர் கடைசியாக 23 ஆம் திகதி இரவு 8.29 மணிக்கு ஒருவருக்கு…

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகளை வெளியிடுவது தொடர்பான பணிகள் கிட்டத்தட்ட…

குளிர்பானத்துக்குள் மண்ணெண்ணையா ; தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதி விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சோடவினை கொள்வனவு செய்த போது சோடாவிற்குள் மண்ணெண்ணை மணம் இருப்பதாக முறைப்பாடு வழங்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று நேற்று (27) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு…

வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை: சுவிஸ் நகரமொன்று சோதனை

சுவிஸ் நகரம் ஒன்று வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யும் விடயத்தை சோதனை முயற்சியாக துவங்க உள்ளது. வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை சுவிட்சர்லாந்தின் Basel நகரம், வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யும் விடயம்…

அறிகுறிகளைப் பார்க்க வேண்டும்… உலகப்போர் தொடர்பில் வாழும் நாஸ்ட்ராடாமஸ் எச்சரிக்கை

இந்த ஆண்டில் ஏற்கனவே நிகழ்ந்துள்ள நிகழ்வுகளால் தூண்டப்பட்டு, ஒருகட்டத்தில் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் என்று வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். உலகளாவிய அரசியல் முறை பிரேசில் நாட்டவரான அதோஸ் சலோமே ஏற்கனவே உலக நாடுகளை மொத்தம்…

கருங்கடல் போா் நிறுத்தம்: ரஷியா நிபந்தனை

மாஸ்கோ: தங்கள் மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள சில பொருளாதாரத் தடைகளை விலக்கினால்தான் உக்ரைனுடன் கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷியா நிபந்தனை விதித்துள்ளது. இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை வெளியிட்டுள்ள…

மெக்சிகோ, கனடா, ஜப்பான், ஜேர்மனி நாடுகளுக்கு அடுத்த இடியை இறக்கிய ஜனாதிபதி ட்ரம்ப்

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீத புதிய வர்த்தக வரிகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மிகப்பெரிய வளர்ச்சிக்கு புதிய வரிகள் ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும், மறுநாள் முதல் வசூல்…

கடந்த கால நினைவுகளால் என்ன பயன்?

கேணல் ஆர். ஹரிஹரன் நான் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ரய்பூர் நகரில் மையம் கொண்ட ஐ.ஐ.எம் என்று அழைக்கப்படும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு தகவல்களை எப்படி மதிப்பீடு (assessment) செய்வது என்பது பற்றி சில…

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின், சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின், சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இன்று பிற்பகல் யாழ்.சாவகச்சேரி பகுதியில், சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும், தற்போதய வேட்பாளருமாகிய செ.மயூரன் தலைமையில்…

சிறார்களுக்கு அச்சுறுத்தல்… தண்டனையிலிருந்து தப்பியோடிய நபர்: பிரித்தானியாவில்…

சிறார் துஷ்பிரயோக வழக்கில் சிக்கி, தண்டனை அறிவிக்கப்பட்ட நபர், தற்போது தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறார் ஆர்வலர் குழு குறித்த நபர் மீது கைது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 வயதான…

72 மணிநேரம்… தேவையான உணவு, தண்ணீரை சேமித்து வைக்க மக்களுக்கு அறிவுறுத்திய ஐரோப்பா

அவசரநிலைகள் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 72 மணிநேரங்களுக்கு போதுமான உணவு, தண்ணீரை சேமித்து வைக்க பொதுமக்களை ஊக்குவிக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு அத்துடன் முக்கியமான உபகரணங்களின் இருப்பை ஐரோப்பா…

இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல்; நால்வருக்கு விளக்கமறியல்

கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சரணடைந்த நான்கு சந்தேகநபர்களும் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று(27) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை…

ஆயிரம் நெல்லிமரங்கள் நடுகை செய்யும் திட்டம் ஆரம்பம்

சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்தும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சூழலை வழங்கும் முயற்சியில், யாழ்ப்பாண மருத்துவ சங்கம் மற்றும் இணுவில் மெக்லியாட் மருத்துவமனை இணைந்து 2025 ம் ஆண்டு பசுமை திட்டத்தை தொடங்கியுள்ளது.…

பணயக்கைதிகள் சவப்பெட்டிகளில் திரும்புவார்கள்… இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை

இஸ்ரேல் காசா பகுதியில் வான்வழித் தாக்குதல்களை தொடர்ந்தால், பணயக்கைதிகளை வலுக்கட்டாயமாக மீட்க முயற்சித்தால் அவர்கள் கொல்லப்படலாம் என்று ஹமாஸ் படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. வலுக்கட்டாயமாக மீட்டெடுக்க இஸ்ரேலின் பணயக்கைதிகளை உயிருடன்…

ஸ்லோவாக்கியாவில் பரவும் தொற்று! மீட்புப் பணியில் செக் குடியரசு வீரர்கள்!

ஸ்லோவாக்கியாவில் வேகமாக பரவி வரும் கால்நடை தொற்றைக் கட்டுப்படுத்த செக் குடியரசு நாட்டின் வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஸ்லோவாக்கியா நாட்டிலுள்ள மூன்று பண்ணைகளின் கால்நடைகளுக்கு கடந்த மார்ச் 21 அன்று கோமாரி நோய் தொற்று…

தேர்வில் காப்பியடிப்பதை அனுமதிக்காத ஆசிரியரின் வாகனம் மீது பட்டாசு வீசிய மாணவர்கள்

தேர்வில் காப்பியடிப்பதை அனுமதிக்காத ஆசிரியரின் வாகனத்தின் மீது பள்ளி மாணவர்கள் பட்டாசு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு வீசிய மாணவர்கள் இந்திய மாநிலமான கேரளா, மலப்புரம் சேந்தப்புராயா பகுதியில் உள்ள பள்ளியில் 12…

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது வெப்பமான வானிலை அதிகரித்து வரும் நிலையில் அது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வலியுறுத்தியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாவட்ட அனர்த்த…

பிணை கிடைத்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சாமர சம்பத் தசநாயக்க

மூன்று வழக்குகள் தொடர்பாக இன்று (27) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு, இரண்டு வழக்குகளில் பிணை வங்கப்பட்டிருந்த்து. எனினும் , மற்றொரு வழக்கிற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர…

இனி தங்கத்தை பணமாக்க முடியாது – அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு

தங்கத்தை பணமாக்கும் திட்டம் தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை(GMS) கடந்த 15 செப்டம்பர் 2015 அன்று, இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. தங்கம் இறக்குமதி செய்வதை குறைக்கும் நோக்கிலும், பயன்படுத்தப்படுத்தாத தங்கத்தை வங்கியில் வைத்து வட்டி பெரும்…

சாமர சம்பத் தசநாயக்க கைது; பிணையில் செல்ல அனுமதி

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சாமர சம்பத் தசநாயக்கவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (27) விசாரணை நடத்தியது. சாமர சம்பத் தசநாயக்க…

மின்னல் தாக்கம் தொடர்பில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு

நாட்டின் சில பிரதேசங்களில் பாரிய மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் குருநாகல், கண்டி, நுவரெலியா மற்றும் அம்பாறை…

பரீட்சைக்கு சென்ற மாணவர்கள் இருவர் மாயம்; திகைப்பில் பெற்றோர்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு எழுதச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 வயதுடைய இந்த இரண்டு மாணவர்களும் மஹியங்கனையில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.…