புத்தாண்டில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்
திருகோணமலை சோமாவதி மகாவலி கங்கையை குறுக்கறுக்கும் ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த இவர்கள் நேற்று (14) அவர்களது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.