இன்று இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம்
புத்தல, வெல்லவாய – மொனராகலை வீதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியானது வேனுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியை செலுத்தியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததோடு, அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் புத்தல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் அம்பாறையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, விபத்து இடம்பெற்ற நேரத்தில் அம்பாறையிலிருந்து கொழும்புக்கு பயணம் செய்துகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.