;
Athirady Tamil News

திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை !!

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடந்தது.…

கிரீஸ் ரெயில் விபத்து – பலி எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு!!

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.…

விவசாயிகளுக்கு இலவச எரிபொருள்!!

விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக்கன்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்கும் வகையில் டோக்கன்களை வழங்குவதற்கு விவசாய…

திட்டமிட்ட திகதியில் தேர்தல் நடைபெறும் என நம்புகிறேன்!!

தேர்தல் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் உறுப்புரிமை கோரி அரசியலமைப்பு பேரவைக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்பாடு!!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் கடமையாற்றும் நபர் ஒருவர் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் அளித்த…

பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் அளவைக் குறைக்கின்றன – ஆய்வில்…

இலங்கையில் உள்ள அரைவாசிக்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் அளவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சேவ் தி சில்ரன் மேற்கொண்ட ஆய்வில் வெளிவந்துள்ளது. நாட்டின் பொருளாதார மந்தநிலையால் ஏற்பட்ட பட்டினி…

முதல்இரவு காட்சிகளை வீடியோ எடுத்து வெளியிட்ட புதுமாப்பிள்ளை- சமூக வலைதளங்களில் பரவியதால்…

ஆந்திரா மாநிலம், கோண சீமா மாவட்டம், கத்ரேணி கோனா பகுதியை சேர்ந்தவர் 20 வயது வாலிபர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. அன்று இரவு புதுமாப்பிள்ளை பெண்ணுக்கு முதல் இரவு ஏற்பாடு செய்தனர். முதலில்…

ஆப்கானிஸ்தானில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 2.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அந்நாட்டு மக்களை…

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 3 ஆயிரம் கோவில்கள் கட்டப்படுகிறது!!

ஆந்திர மாநிலத்தில் இந்து மத நம்பிக்கையை பாதுகாக்க திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 3,000 கோவில்கள் கட்டப்படுகிறது. இது தொடர்பாக ஆந்திர அறநிலையத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான கோட்டு சத்தியநாராயணா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

இரட்டிப்பாகும் விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவு!!

உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடும் ஆசிரியர்களுக்கான தினசரி கூட்டுக் கொடுப்பனவான 900 ரூபாவை 2,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஒட்டுமொத்த மதிப்பீட்டு கொடுப்பனவை இரட்டிப்பாக்குவதற்கும் நேற்று (01) அமைச்சரவை…

சுற்றுலா பயணிகளுக்காக சிறப்பு படை அமைப்பதில் கவனம்!!

சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோரின் பங்குபற்றலுடன் பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இந்த…

அபிவிருத்திச் சட்டம் மற்றும் நெல் நிலச் சட்டத்தில் மீள்திருத்தம்!!

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிக்கும் முயற்சியில், முதலீட்டுத் தகவல்களை இலகுவாக அணுகும் வகையில் டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மேலும், இலங்கையின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாத…

டிக்-டாக் செயலியை தடை செய்ய ஜோ பைடனுக்கு அதிகாரம்: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!!

இந்தியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சீனாவை சேர்ந்த பிரபல டிக்-டாக் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை செய்யப்பட்டது. மேலும் அந்நாட்டு…

தமிழக கடற்தொழிலாளர்களின் 08 படகுகள் அரசுடமை!!!

தமிழக கடற்தொழிலாளர்களின் 8 படகுகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றினால் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கு நேற்றைய தினம்…

யாழில் 11 சந்தை வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

யாழ்ப்பாணத்தில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை (தராசுகள்) பயன்படுத்திய 11 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் நேற்றைய தினம்…

கர்நாடகாவில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்!!

கர்நாடக அரசு துறைகளில் உள்ள 10 லட்சம் ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்கும் நோக்கத்தில் 7-வது ஊதிய குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் இடைக்கால அறிக்கையை பிப்ரவரி இறுதிக்குள் பெற்று 40 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும்…

சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச கடற்புல்தின நிகழ்வு!! (படங்கள்)

மாணவர் மத்தியில் கடற்புல்லின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் வலிகாமம் கல்விவலயத்தில் தரம் 10,11 இல் நீருயிரின வளத் தொழிநுட்பவியல் பாடம் கற்கும் மாணவரிடையே கடற்புல் தொடர்பான அறிவுக் களஞ்சியப் போட்டி நடத்தப்பட்டு அதில்…

இந்த ஆண்டின் முதல் சீன சுற்றுலாப் பயணிகளின் குழு நாட்டிற்கு!!

சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையை மீண்டும் ஆரம்பித்து, 2023ஆம் ஆண்டு இலங்கைக்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகளின் முதலாவது குழு இலங்கையின் விசேட விமானம் மூலம் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கைக்கு 07 நாள் விஜயமாக…

IMF கடன்களுக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக தெரிவிப்பு!!

சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் கடன் விண்ணப்பத்திற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான ஆவணங்களை சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி நிதியமைச்சகத்திடம்…

உருளைக்கிழங்கு – வெங்காயம் விலை குறைந்தது!!

புறக்கோட்டை ஜெயா மொத்த சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை தற்போது 95 ரூபாவாக உள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ…

கச்ச தீவு திருவிழா நாளை ஆரம்பம்!!

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் அது தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டுக்கான கச்சதீவு புனித…

தொற்று குறித்து முன்கூட்டி எச்சரிக்கும் கருவி தேவை – இந்தியா வந்துள்ள பில் கேட்ஸ்…

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரும், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலருமான பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். கரோனா தொற்றுக்குப்பின் அவர் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். மும்பையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:…

ஹர்ஷ டி சில்வாவின் பெயர் மீண்டும் பரிந்துரை !!

வெற்றிடமாகியுள்ள பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயரை மீண்டும் பிரேரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பாராளுமன்ற நடவடிக்கைகள்…

10 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 46 வயதான ஆசிரியர் கைது !!

பாடசாலை மாணவியான பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைது…

மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட விசாரணை !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல முறைப்பாடுகள்…

நல்லூரில் வாள் வெட்டு ; பிரதான சந்தேகநபர் கைது – வாளும் மீட்பு!!

சிவராத்திரி தினத்தன்று நல்லூர் பின் வீதியில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய பிரதான சந்தேகநபர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பதினெட்டாம் திகதி மகாசிவராத்திரி…

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி – வீரர்களுக்கு உணவு வழங்க முடியவில்லை!!

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் எரிபொருள், உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாட்டு தூதரகங்களின் எண்ணிக்கை குறைப்பு,…

மு.க.ஸ்டாலின் சேவை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேவை… பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று பிரமாண்ட பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடங்கியது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டின்பேரில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்…

ஐரோப்பிய நாட்டை இலக்குவைத்த புட்டின் – அச்சத்தில் இரத்து செய்யப்படும் விமான சேவைகள்…

பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணமாக குறிப்பிட்டு, ஐரோப்பிய நாடான மால்டோவாவுக்கான அனைத்து விமானங்களையும் மார்ச் மாதம் முதல் இரத்து செய்வதாக Wizz Air விமானச்சேவை அறிவித்துள்ளமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினின்…

10 அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் தீர்மானம்!!

தான் உட்பட 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இந்த மாதத்தி் புதிய நியமனங்கள் குறித்து…

அமெ. டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வு!!

இலங்கை மத்திய வங்கியினால் புதன்கிழமை (01) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்துக்கு அமைய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சாதனை உயர்வை எட்டியுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 351.72 ரூபாயாகவும் விற்பனை விலை 362.95…

வரும் பாராளுமன்ற தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும்: மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்…

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசியதாவது:- என்னை ஒப்பிடுகையில் நீங்கள் இளமையானவர், நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்.…

ஜோன்சன் படைப்பிரிவை மொத்தமாக அழித்த ரஷ்யா – வெளியாகிய அதிர்ச்சி தகவல் !!

முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் பெயரில் உக்ரைன் இராணுவத்தில் உருவாக்கப்பட்ட பிரிவை ரஷ்யாவின் வாக்னர் குழு மொத்தமாக அழித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் பக்முத் நகரை கைப்பற்றியுள்ள நிலையில், வாக்னர் குழு…

காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணி கரை சேராது- பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று பிரமாண்ட பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய மாநாட்டுக்…