;
Athirady Tamil News

மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள் !!

கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் அடுத்த வாரம் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் வழக்கம் போல் நடைபெறும். எனினும் குறித்த பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகள் நடத்தப்படுமா என்பது அந்தந்த பாடசாலை அதிபர்களின் விருப்பப்படி செயல்படுத்த…

எரிபொருள் தாங்கிகளை திறக்க வேண்டாம் !!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்தால் அங்குள்ள எரிபொருள் தாங்கிகளை திறக்குமாறு பொதுமக்களால் விடுக்கப்படும் கோரிக்கைகளை நிராகரிக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தின்…

திறந்த கணக்கு மூலம் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி!!

திறந்த கணக்கு மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி ஜூலை 01 முதல் வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பொருட்கள் இறக்குமதி…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகத் துறைத் தலைவருக்குப் பேராசிரியராகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சி. ரகுராம் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பல்கலைக்கழகப் பேரவை இன்று வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக்…

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!

யாழ்ப்பாணம் இணுவில் கிழக்கு பகுதியை சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது 26) எனும் இளைஞனே நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்த நீர் இறைக்கும் மோட்டார் பழுதடைந்ததால், அதனை திருத்த முற்பட்ட வேளையே மின்சாரம் தாக்கி…

மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் நிலையங்களில் நடைபெறும் நிகழ்வுகளால் மக்கள் மனவேதனை!!…

மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் பாரிய அளவில் வரிசைகளில் இரவு பகலாக அலைகின்றனர். எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பல மணிநேரங்களாக காத்துக் கொண்டிருக்கும் தங்களுக்கும் அரச உத்தியோகத்தருக்கும் என வேறு வேறான எரிபொருள்…

இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கை!

இலங்கையில் ஒருவர் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அதிகபட்ச வரம்பு 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைக்காக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது!!

கோப்பாய் , யாழ்ப்பாணம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால்…

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடுமையான மோதல் !!

வெல்லவாய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் 4 பேர் வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த நபரொருவர் மொனராகலை…

நுண்நிதி டிப்ளமோ கற்கைநெறி அறிமுக நிலை!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தினால் நடாத்தப்படும் நுண்நிதி டிப்ளமோ கற்கைநெறியின் ஐந்தாம் அணி மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு நாளை 26 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை, முற்பகல் 9.30 மணிக்கு, கலாசாலை…

3000 பேக்கரிகள் மூடப்படும் நிலை !!

பேக்கரி உணவுகளை தயாரிக்கும் மூலப்பொருட்களின் விலை 300 சதவீதத்தினால் அதிகரித்துள்ள காரணத்தினால் பேக்கரி உரிமையாளர்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும், 50 கிலோகிராம் கோதுமை மா பொதியின் விலை 1000 ரூபாவினால்…

கொழும்பில் 10 மணித்தியால நீர் வெட்டு!!

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (25) இரவு 10 மணி முதல் 10 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதனடிப்படையில், கோட்டை, புறக்கோட்டை, பெத்தகான, மிரிஹான, மாதிவெல, தலபத்பிட்டிய,…

எரிபொருள் வரிசையில் காத்திருந்த இளைஞன் பலி!!

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த 19 வயது இளைஞன் ஒருவர் கொல்களன் லொறி ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். அநுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியின் பந்துலகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த…

மழை நிலைமை இன்றிலிருந்து சற்று அதிகரிக்கும்!!

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) மழை நிலைமை இன்றிலிருந்து சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்…

இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் விடுத்துள்ள…

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியானது முழுவதுமான அவசரகால மனிதாபிமான நெருக்கடியாக மாறக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சுமார் 200…

இலங்கைக்கு படையெடுக்கவுள்ள அமெரிக்க உயர்மட்ட குழு !!

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளது. இந்த குழு ஜூன் 26 முதல் 29 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச சமூகத்தின் உதவிகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் முறை குறித்து ஜனாதிபதிக்கு விளக்கிய…

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் வழங்கும் ஸ்திரமான செய்தியின் மூலம் சர்வதேச சமூகத்தினருக்கு இலங்கைக்கு இலகுவாக ஒத்துழைப்புக்களை வழங்க முடியும் என்று ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய…

மக்கள் வரிசையில் நிற்கும்போது ஆட்சியாளர்கள் யோகா செய்கின்றனர் – சஜித் !!

இலங்கையின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்கள் வரிசையில் நிற்கும்போது குளிரூட்டி இயந்திரங்களை வைத்துக் கொண்டு யோகா செய்து கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில்…

சரக்குக் கட்டணமின்றி ஏற்றிச்செல்ல தயார் !!

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில், சர்வதேச அளவில் நன்கொடையாக வழங்கப்படும் நாட்டிற்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை சரக்குக் கட்டணமின்றி விமானத்தில் ஏற்றிச் செல்வதற்கான பொறுப்பை தாம் ஏற்பதாக…

திருமணம் செய்து வைக்குமாறு இரு பெண்கள் கோரிக்கை !!

இந்தியாவிலிருந்து வந்த பெண் ஒருவர் அக்கரைப்பற்று பெண் ஒருவரை திருமணம் செய்து வைக்கும்படி கூறியதையடுத்து, இரு பெண்களையும் உளநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

சற்றுமுன் வௌியான வர்த்தமானி அறிவித்தல்!!

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்வதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடை செய்து குறித்த…

கடனட்டை வைத்திருப்பவர்களுக்கான அறிவிப்பு!!

இலங்கையில் உள்ள பல வணிக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய நிலையில் பல வணிக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதத்தை 30% ஆக அதிகரித்துள்ளன. கடன் அட்டைகளுக்கான அதிகபட்ச வட்டி…

600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது – மானிப்பாயில் சம்பவம்!! (படங்கள்)

600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர். மானிப்பாய் சோதிவேம்படி பாடசாலைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் இன்றிரவு இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.…

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இன்று மாலை யாழ் நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில்…

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இன்று மாலை யாழ் நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். இந்து பௌத்த கலாசார பேரவையின் பொதுச் செயலாளர் எம்.டி.எஸ்.இராமச்சந்திரனின் அழைப்பையேற்று இந்து பௌத்த கலாசார பேரவையில் இரண்டாம் மொழி கற்கை நெறியை…

ஜெர்மனியில் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள்.. (வீடியோ)

ஜெர்மனியில் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள்.. (வீடியோ) ஜெர்மனியில் "விடுதலைப் புலிகளுக்கு நிதி சேர்த்தார்கள், அதுவொரு பயங்கரவாத அமைப்பு" எனும் அடிப்படையில் நடைபெற்ற வழக்கில் இன்றையதினம் ஜெர்மனி அரச நீதிமன்றால்…

கோடையை குளிரவைக்கும் முலாம்பழம் !! (மருத்துவம்)

முலாம் பழம் அல்லது திரினிப்பழம்,இது வெள்ளரிப்பழத்தை ஒத்த பழம். இதன் விதை வெள்ளரி விதையைப் போலவே இருக்கும். வெள்ளரிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போலவே இதன் விதைகளையும் நீக்கிவிட்டு உண்ணலாம். வெள்ளரிப் பழத்தின் தோல் மெல்லியதாக…

“யாழ்ப்பாணக் கல்லூரியில் ‘கைவைக்க’ எத்தனிக்கும் கயவர் கூட்டம்” !! (கட்டுரை)

பொதுவாக, இலங்கையின் இன்றைய நெருக்கடியானதும் துன்பகரமானதுமான நிலைமைகளை எடுத்துக்கொண்டால், அதற்குக் காரணமானவர்கள் ராஜபக்‌ஷர்கள் என்பதை எந்தக் குழந்தையும் சுட்டுவிரலைச் சுட்டும். குறிப்பாக, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுமாறு கோட்டாபய…

தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவிப் பிரமாணம்!!

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. தம்மிக்க…

ஒரே நாளில் மூன்று சட்டங்கள்!!!

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட கைத்தொழிற் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றில்…

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசேட செயற்திட்டம்!!

காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பில் சில செயற்திட்டங்களை தாம் யாழில் தங்கியுள்ள சில நாட்களில் விசேடமாக கவனம் செலுத்தி முன்னெடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள…

3 பில்லியன் பெறுமதியான பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்!

இந்திய மக்களால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித்தொகையுடன் கூடிய கப்பல் இன்று (24) இலங்கையை வந்தடைந்துள்ளது. அவற்றில் 14,712 மெட்ரிக் தொன் அரிசி, 250 மெட்ரிக் தொன் பால் மா மற்றும் 38 மெட்ரிக் தொன் மருந்துகள் அடங்குவதாக…

விவசாய அமைச்சின் அதிரடி தீர்மானம்!!

எதிர்வரும் ஜூலை மாதம் 06 ஆம் திகதி முதல் விவசாய அமைச்சின் கீழ் உள்ள அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிடம் இருந்து கிடைக்கப்பெறவுள்ள யூரியா உரத்தை வினைத்திறனான முறையில் விநியோகிப்பதற்காக இவ்வாறு…

காதல் வலை வீசி மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த அதிர்ச்சி சம்பவம் !!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு சம்பவத்தில் ஐந்து…