மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் நிலையங்களில் நடைபெறும் நிகழ்வுகளால் மக்கள் மனவேதனை!! (படங்கள்)
மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் பாரிய அளவில் வரிசைகளில் இரவு பகலாக அலைகின்றனர்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பல மணிநேரங்களாக காத்துக் கொண்டிருக்கும் தங்களுக்கும் அரச உத்தியோகத்தருக்கும் என வேறு வேறான எரிபொருள் நிரப்பு நிலையங்களை அத்தியாவசிய அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக பிரகடனப்படுத்தப்பட்டுத்துமாறு மக்கள் கோரிக்கையினை முன்வைக்கின்றனர்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் இதில் கூடுதலான கவனம் செலுத்தி மக்களுக்கு தீர்வினை வழங்க முன்வரவேண்டுமென மக்கள் தெருவிக்கின்றனர்.
நாடளாவிரீதியில் எரிபொருள் தட்டுப்பாடுகளால் அனைவரும் மனவேதனையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மன்னாரில் இருந்து “இராவணேஸ்வரன்”








