;
Athirady Tamil News
Daily Archives

6 June 2022

சாராயப் போத்தலால் உயிர் பறித்தது!!

மதுபான போத்தலை இடுப்பில் செருகிக் கொண்டு வந்தவர், நிலத்தில் விழுந்ததால், போத்தல் உடைந்து, உடலில் கடும் காயமேற்பட்டு உயிரிழந்துள்ளார். ஏ – 9 வீதியில் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம்…

ரின் மீன் விலை 600 ரூபா!!

சந்தையில் ரின் மீன் (பெரிய செமன் ரின்) ஒன்றின் விலை 600 ரூபாவாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை ஒரு பெரிய செமன் ரின்னின் விலை 450 முதல் 500 ரூபா வரை காணப்பட்டது. அத்தோடு முட்டை, இறைச்சி, கருவாடு…

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் கால்கடுக்க நீண்டவரிசையில் காத்திருக்கும் மக்கள்!!…

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் இன்றையதினம் மக்கள் கடவுச்சீட்டினை பெறுவதற்காக நீண்டவரிசையில் காத்திருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து அத்தியாவசிய…

பதவி விலக முடியாது: ஜனாதிபதி கோட்டா!!

தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது என்றும் தனக்கு 5 வருடங்களுக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்த பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக தாம் பதவி விலகப்போவதில்லை…

ஆபாச வசை: எம்.பியின் மகன், மருமகள் கைது !!

தென் அதிவேக நெடுஞ்சாலையின் பெந்திகம மாற்றத்தில் வைத்து பொலிஸ் அதிகாரியொருவரை ஆபாச வார்த்தைகளால் வசை பாடிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் மகனும் மருமகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீரக்கெட்டிய…

’பணயக் கைதியாக புதிய பிரதமர் ரணில்’ !!

ஜனாதிபதி, இந்த இக்கட்டான காலச் சூழலைத் தாண்டுவதற்கு புதிய பிரதமரை பணயக் கைதியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாங்கில் செயற்படுகின்ற அரசியல் நடவடிக்கையையே தற்பொழுது காண்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்…

நாளை முதல் எரிபொருள் அட்டைக்கு யாழ். விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய்!!

கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு நாளை செவ்வாய்க்கிழமை முதல் மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசனின் அறிவுறுத்தலில் கமநல சேவைகள் திணைக்களம்…

மஹிந்தவின் முக்கியஸ்தர் கைது !!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தில் மே. மாதம் 9 ஆம் திகதியன்று இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே…

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இளைஞர் பலி!!

கொழும்பு-15 முகத்துவாரம் பகுதியில் இன்று (06) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிர​யோக சம்பவம் தொடர்பில், பொலிஸ் திணைக்களம் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது. ​முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரெபாணா வத்தை முன்பக்கமாக,…

இலங்கையில் பவுன் 457/= தினார் 1,177/= தங்கம் 173,250/= !!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 365.2660 ரூபாவாக இன்று (06) பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 355.2941 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி…

தேவையில்லாமல் உணவுப்பொருட்களை சேமித்து வைக்கக் வேண்டாம்!!

எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு தொடர்பில் லாப்ஸ் எரிவாயுநிறுவனத்திடம் விசாரணை நடத்துமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (06) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்…

ரஷ்யாவிற்கான தபால் விநியோகம் இடைநிறுத்தம்!!

ரஷ்யாவிற்கு தபால் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கான வர்த்தக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

சமையல் எரிவாயு அத்தியாவசியமற்ற பொருள் !!

சமையல் எரிவாயு அத்தியாவசிய பொருள் என்ற வர்த்தமானியிலிருந்து ஒரு வருடத்துக்கு முன்னர் நீக்கப்பட்டதால், அவர்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையால் தலையிட முடியாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.…

அமைச்சர் பிரசன்னவுக்கு கடூழியச் சிறை !!

வர்த்தகர் ஒருவரிடமிருந்து 64 மில்லியன் ரூபாய் கப்பம் பெற்றார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு ​​மேல் நீதிமன்றம் அவருக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது. இந்த வழக்கின்…

உலக வளை பாத தினத்தையொட்டி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு!!

உலக வளை பாத தினத்தையொட்டி பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு யாழ் போதனா வைத்தியசாலையில் எலும்பியல் சத்திரசிகிச்சை நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை humanity &inclusion நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக…

இந்திய துணைத் தூதர் சதாசிவம் கலையரசியினை பாராட்டி கெளரவித்திருந்தார்.!! (படங்கள்)

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் அவர்கள் தேசிய கிரிக்கெட் குழாமிற்கு தெரிவுசெய்யப்பட்ட வீராங்கனை சதாசிவம்.கலையரசியினை பாராட்டி பரிசில் வழங்கி கெளரவித்திருந்தார். இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு வருகை தந்திருந்த…

பாடசாலைக்கு போக மாட்டோம் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா…

அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என அனைவரும் "போகமாட்டோம் பாடசாலைக்கு" என்ற கோசத்தோடு வீதியில் இறங்கும் நிலை ஏற்படுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா புவனேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கல்வி…

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தீர்மானம்!!

8ம் திகதி கொழும்பு நுகேகொடை செயலகத்தில் கூடவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டத்தில் 21ம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை,…

முன்கூட்டியே முடிவடைந்த கொழும்பு பங்குச் சந்தை!!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளந்த வர்த்தகம் இன்று (06) முன்கூட்டியே முடிவடைந்து உள்ளது. பங்குச் சந்தையில் முன்னணி விலைக் குறியீடான S&P SL20 முந்தைய வர்த்தக நாளுடன் ஒப்பிடும்போது 5%க்கும் அதிகமாக சரிந்துள்ளது.

“என்னை தேட வேண்டாம்” தந்தைக்கு 12 வயது சிறுமி கடிதம் !!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மூங்கிலாற்று பகுதியில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4ஆம் திகதி இரவு நித்திரைக்குச் சென்ற சிறுமி அதிகாலையில்…

ரணிலின் கோரிக்கையை ஏற்றார் கரு ஜயசூரிய !!

புதிய பாராளுமன்ற குழுக்களை அமைப்பதற்கு உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கோரிக்கையை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தின் மேற்பார்வைப் பங்கை…

பனிஸ் விலை 100 ரூபாய்?

பேக்கரி உரிமையாளர்கள் 12 சதவீத வற் வரியை செலுத்த வேண்டியிருப்பதால் எதிர்காலத்தில் பேக்கரி பண்டங்களின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். உரிய வற்…

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது!!

நாவலப்பிட்டி நகரில் மிக நீண்ட காலமாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி பொலிஸார், கம்பளை பொலிஸார் மற்றும் கம்பளை போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையிலேயே…

யாழ் பல்கலைக்கழக மாணவிகள் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினுள் அத்துமீறி நுழைந்த வெளியாள்கள் இருவர் அங்கிருந்த பல்கலைக்கழக மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய சமயம் மாணவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். யாழ். பல்கலைத்தில் தியாகி பொன். சிவகுமாரன் நினைவு தினம் நேற்று மாலை…

கச்சதீவு சூறையாடுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது – அகில இலங்கை தொழிலாளர் சங்கங்களின்…

கச்சதீவு என்பது எமது நாட்டிலுள்ள வளமிக்க ஒரு தீவு. எனவே எமது நாட்டிலுள்ள ஒரு தீவை கையகப்படுத்துதை சூறையாடுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என அகில இலங்கை தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம்…

ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக அதிகரிப்பு!!

அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக உயரும் நிலை காணப்படுவதாக அனுராதபுரம் மாவட்ட சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு…

பற்றி எரிந்தது சூரிய மின்உற்பத்தி நிலையம் !!

வவுனியா - கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. இதன்போது அங்கு புதிதாக வைக்கப்பட்டிருந்த சூரிய ஒளி மின் உற்பத்தி உபகரணங்கள் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து…

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்!!

தற்போது அதிகளவில் பேசப்பட்டு வரும் மூன்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் நாளை (07) நடைபெறவுள்ள ஆணைக்குழு கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக அரச சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சேவை தேவைகளை காரணம் காட்டி பொது…

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு!!

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (06) நடைபெறவுள்ளது. ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

இனிவரும் காலங்களில் பட்டினிச் சாவு வரும் !!

பசளையை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு கொடுக்கின்ற போது, கஞ்சியாவது குடித்து மக்கள் வாழ்வார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பொருளாதார நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக்; கற்கைகள் வணிக பீடமும் யாழ்ப்பாணம் வர்த்தகத்…

ஈழ வளநாட்டின் மகுடமாய் விளங்கும் யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது நீண்டதொரு வரலாற்று பின்னனியினை கொண்ட தேசியப் பல்கலைக்கழகம் ஆகும். “மெய்பொருள் காண்பது அறிவு” என்கின்ற மகுடவாசகத்துக்கு…

மின் கட்டண அதிகரிப்பு யோசனை அமைச்சரவையில் !!

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை இன்று(06) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார சபையின் வரம்பற்ற இழப்புகளை குறைக்கும் நோக்கில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக…

பால்மா விலை மீண்டும் அதிகரிப்பு!!

எதிர்வரும் சில தினங்களில் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன அண்மையில் இடம்பெற்ற வரி அதிகரிப்பினால் இவ் விலை அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக…

தமிழக முதலமைச்சரிடம் கஜேந்திரன் விடுத்துள்ள கோரிக்கை !!

தமிழக சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிப்பதற்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று (5)…