;
Athirady Tamil News

பாலஸ்தீன-இஸ்ரேல் யுத்தம்: யாருக்கு சேவகம் செய்யும்..!

0

இன்று மத்திய கிழக்கை மையப்படுத்தி செங்கடலிலும், ஏடன் வளைகுடாவிலும் இஸ்லாமிய உலகத்துக்கும் மேற்குலகத்திற்குமான யுத்தம் தொடர்கிறது.

பலஸ்தீன – இஸ்ரவேல் நிலப்பரப்பிற்கான புவிசார் அரசியலும்(geopolitics), அரசியல் புவியியலும்(Political geography), பூகோள அரசியலும்(Global politics) முட்டி மோதும் களம் இப்போது இந்து சமுத்திரத்தை மையப்படுத்தி நகர்ந்து இருக்கிறது.

இந்தக் களத்தில் இந்து சமுத்திரமும் பூமிப் பந்தின் மத்தியாக கருதப்படுகின்ற மத்திய கிழக்கு என்று அழைக்கப்படுகின்ற மேற்காசியாவும் வட ஆப்பிரிக்காவையும் உள்ளடக்கிய அராபிய – இஸ்லாமியப் பகுதியே இதன் பிரதான களமாகவும் மையமாகவும் உள்ளது.

இன்றைய உலகளாவிய அமைப்பு முறைமையையும்(global system) உலக ஒழுங்கையும்(World order) தொடர்ந்து தக்கவைக்க மேற்குலகத்தினரால் வெல்லப்பட வேண்டிய பகுதியாகவும் இந்த மத்தியகிழக்கு தோற்றம் பெற்று விட்டது.

நாடுகாண் பயணங்கள்
இன்றைய உலகின் அரசுகளின் அமைப்பு முறைமை என்பது ஒரு பொதுவான global system தின் மூலம் வடிவம் பெற்றுள்ளது.

இந்த வடிவமைப்பானது மனிதகுல வரலாற்றின் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆண்டு காலத்திற்கு முந்திய பண்டமாற்று வர்த்தக வரலாற்று வளர்ச்சியின் ஊடாகவும் அதனூடான அரசுகளின் தோற்றமும், பேரரசுகளின் வளர்ச்சியும், யுத்தங்கள், ஆக்கிரமிப்புக்கள், கொலைகள், அழிப்புக்கள் என்பவற்றுக்கு ஊடாகவும் தொடர் மாற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் உட்பட்டு இன்றைய வடிவத்தை பெற்று இருக்கிறது.

எனினும் நிலை பெற்றுள்ள இன்றைய இந்த உலகம் தழுவிய வடிவமைப்பு மாற்றத்திற்கு உந்தியவர்கள் அல்லது வித்திட்டவர்கள், ஊக்கிகளாக தொழிற்பட்டவர்கள் என்றால் அது இந்த இஸ்லாமிய உலகம்தான். அது எப்படியெனில் 1453ல் ஓட்டோமான் துருக்கியர்கள் , கொன்ஸ்தாந்தி நோபிளை கைப்பேற்றியதனால் மேற்கு-கிழக்குக்கான வர்த்தக பாதை தடைப்பட்ட போதுதான் ஐரோப்பியர் புதிய பாதைகளை தேடி நாடுகாண் பயணங்களை மேற்கொள்ள தூண்டிய ஊக்கியாகும்.

வாஸ்கோடகாமாவினால் இந்து சமுத்திரத்திற்கான கடல்வழிப் பாதையும் கொலம்பஸ்சினால் அமெரிக்க கண்டமும் கண்டுபிடிக்கப்பட்ட. தன்மூலம் மேற்கு ஐரோப்பியர்களுடைய உலகம் தழுவிய கடல்சார் அரசியல் ஆதிக்க விஸ்தரிப்பு உருவானது. அதுவே வாஸ்கோடகாமா-கொலம்பஸ் யுகம் ஒன்றைத் தோற்றுவித்தது.

புவிசார் அரசியல் யுத்தம்
கடந்த 500 ஆண்டுகால வாஸ்கோடகாமா யுகத்தினால் கட்டமைக்கப்பட்ட வடிவமைப்புதான் இன்றைய global system என்று சொல்வது பொருத்தமானது. “”கடலை ஆள்பவனே தரையை ஆள்வான்”” என்பதற்கு இணங்க ஐரோப்பியர்கள் கடல் மார்க்கங்களை கண்டுபிடித்து உலகின் உயிர்வாழும் மூன்று சமுத்திரங்களையும் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்ததனால் வஸ்கொடகாமா யுகத்தின் விரிவாக்கமும், புதிய விஞ்ஞான இயந்திர சாதன கண்டுபிடிப்புகள், வர்த்தக வளர்ச்சி, ஐரோப்பிய கடல்சார் பேரரசு விரிவாக்கத்தின் விளைவுமாக உலகம் தழுவிய ஐந்து கண்டங்களிலும் 240 கோடி (2.5 பில்லியன்) கிறிஸ்தவர்களைக் கொண்ட முதலாவது மதமாகவும் உலக சனத் தொகையில் 31.4% தொகையைக் கொண்டதாகவும், உலகின் 126 நாடுகளில் பெரும்பான்மையாக வாழ்வதுமாக பெருவளர்ச்சி அடைந்திருக்கிறது.

ஐரோப்பியர்களின்கடல்சார் வல்லாண்மை, வர்த்தக, பொருளியல் வளர்ச்சி என்பன உலகளாவிய நாடுகளையும், அரசுகளை வடிவமைப்பதிலும் தீர்மாணிப்பதிலும், கட்டமைப்பதிலும் செல்வாக்கு செலுத்தினர்.

இதன் மூலம் இன்றைய International order மேற்குலகத்தாரின் கையில் உள்ளது. ஆனால் மத்திய கிழக்கில் கிபி 6ம் நூற்றாண்டில் தோன்றிய இஸ்லாமிய மதம் அந்தப் பிராந்தியத்தில் ஒரு பெரும் புவிசார் அரசியல் யுத்தத்தை மேற்கொண்டு கிறிஸ்தவத்தை துடைத்தெறிந்து மத்திய கிழக்கில் இஸ்லாம் மதத்தை கொண்ட தரைசார் பேரரசை உருவாக்கி தரையை மட்டும் சார்ந்து விஸ்தரிப்பை செய்து 26 இஸ்லாமிய நாடுகளையும் உள்ளடக்கிய 53 கோடி இஸ்லாமியர்களையும்,.

உலகிற்கான சக்தி வளங்கள்
இந்தப் பிராந்தியத்துக்கு வெளியே135 கோடி இஸ்லாமியர்களையும் தோற்றவித்தள்ளார்கள். உலகில் உள்ள 190 கோடி இஸ்லாமியர்களில் 48 நாடுகளில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். 43 நாடுகளில் இஸ்லாமிய சட்டமே நடைமுறையில் உள்ளது. உலக சனத் தொகையில் 24.9% இஸ்லாமியர்களாக உள்ளனர்.

எனினும் இவர்களின் பிராந்தியத்தின் கடற் பகுதிகூட இவர்களின் கையில் இல்லை. வாஸ்கோடகாமா கண்டுபிடித்த புதிய கடல் பாதைகள் மத்திய கிழக்கை முற்றுகையிட்டு கடந்த 500 ஆண்டுகளாக இஸ்ராமியர்களை இந்தப் பிராந்தியத்துக்குள் சிறைப்பிடித்துள்ளார்கள் என்று சொல்லுவதே சாலப்பொருந்தும்.

19 நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணை வளம் மத்திய கிழக்கில் பெருமளவில் இருப்பதனால் இன்றைய உலகிற்கான சக்தி வளங்களை வழங்கும் பிராந்தியமாகவும் இது திகழ்கிறது.

இருந்த போதிலும் மத்திய கிழக்கினால் ஐரோப்பியர்களுக்கு சவாலாக எழுந்து நிற்க முடியவில்லை . எழுந்து நிற்க ஐரோப்பியர்கள் அனுமதிக்கவும் இல்லை. தொடர்ந்தும் இப்பிராந்தியத்தை தமது கட்டுக்குள் வைத்திருக்கவே மேற்குலகம் விரும்புகின்றது.

அது மாத்திரமன்றி கிழக்கு மேற்கிற்கான வர்த்தக கடல்ப் பாதை என்பது ஐரோப்பாவில் நெதர்லாந்தில் இருந்து புறப்பட்டால் ஆங்கில கால்வாய் ஊடாக ஆப்பிரிக்காவின் மேற்கு கரையோரமாக அத்லாந்தி சமுத்திரத்தில் பயணித்து ஆபிரிக்கா கண்டத்தைச் சுற்றி நன்னம்பிக்கை முனை ஊடாக இந்து சமுத்திரத்துக்குள் பிரவேசித்து கிழக்கு நோக்கி பயணித்து வங்காள விரிகுடா ஊடாக மலாக்கா தொடுகடல் வழியாக சிங்கப்புர் சென்ற அதனுாடாக பசிபிக் சமுத்திரத்துக்குள் நுழைய முடியும்.

இந்தக் கடல் பாதை ஏறத்தாழ 12, 000 கடல் மைல் நீளமுடையது. 36 நாட்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

பூகோள அரசியல்
இந்த நீண்ட கடல் பாதையின் தூரத்தை குறைப்பதற்கு ஒரு வழியாகவே மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் பிரித்து இருக்கின்ற எகிப்துக்கு சொந்தமான சுயெஸ் நிலத் தொடரில் 193.30 km (120.11 mi) நீளமும் 300 மீ அகலமும் கொண்ட செயற்கைக் கால்வாய் வெட்டி அமைக்கும் பணி 25 செப்டம்பர் 1859 ஆரம்பிக்கப்பட்டு 17 நவம்பர் 1869ல் நிறைவு செய்யப்பட்டது.

இதன் மூலம் மத்தியதரைக் கடலும் செங்கடலும் இணைக்கப்பட்டு கப்பல் போக்குவரத்து சுயெஸ் கால்வாய் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனால் சிங்கப்பூரில் இருந்து நெதர்லாந்துக்கான கடல்வழிப் பயணம் 8500 கடல் மைல்களக குறைக்கப்பட்டது மாத்திரமல்ல 26 நாள் கடல் பயணத்தின் மூலம் ஐரோப்பாவை அடைந்திட முடியும். 2012 ஆம் ஆண்டில், 17,225 கப்பல்கள் கால்வாயை கடக்கின்றன. அதாவது நாள் ஒன்றுக்கு 47 கடந்து சென்றன.

ஆனால் 2015ல் இருந்து நாள் ஒன்றுக்கு 97 கப்பல்கள் இந்த சுயெஸ் கால்வாய் ஊடாக ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கான பண்டங்களைச் சுமந்து பயணத்தை மேற்கொள்கின்றன. அந்தவகையில் மேற்குக் கிழக்கு வர்த்தக பாதையில் ஒரு கேந்திர ஸ்தானத்தில் மத்திய கிழக்கு இருப்பதனால் இந்த பிராந்தியத்திற்கு என்று தனியான புவிசார் அரசியல் நலன்களும், குணாம்சங்களும் உண்டு.

அத்தோடு இப் பிராந்தியத்தியம் புவிசார் அரசியலிலும் அதே நேரத்தில் உலகம் தளவிய பூகோள அரசியலின் செல்வாக்குக்கு உட்பட்டதாகவும் செல்வாக்கினை நிர்ணயிக்கும் கேந்திர ஸ்தானமாகவும் அமைந்துள்ளது.

மூன்று கண்டங்களையும் மூன்று சமுத்திரங்களையும் இணைக்கும் மத்திய தளமாக அமைவதனால் இந்த பிராந்தியம் பூகோள அரசியலில் இன்று முதன்மை பாத்திரத்தை வகிக்கிறது.

இந்த அடிப்படையிற்தான் மத்திய கிழக்கை கட்டுப்படுத்துவதற்காக செருகப்பட்ட ஒரு ஆப்பாகவே யூததேசம் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட யூததேசத்தை தொடர்ந்து பாதுகாக்கவும் இக்கடற் பிராந்தியம் மீதான ஆதிக்கத்தைத் தொடர்ந்து தமது கையில் தக்கவைத்துப் பேணிப் பாதுகாப்பதற்காகவும் மேற்குலம் இந்த யுத்தத்திதை விட்டுக்கொடுப்பின்றி முன்னெடுக்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.