;
Athirady Tamil News

அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ படங்கள்)

0

அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ படங்கள்)

அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் மாணவர்களை மகிழ்வித்தது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
################################

வேலணையைச் சேர்ந்தவரும் வாழ்ந்தவருமான அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களது 24 ஆம் ஆண்டு சிரார்த்த ஆண்டுத் திவசத்தை முன்னிட்டு அன்னாரின் மகனும் சுவிஸ் நாட்டில் வாழ்பவருமான சுதாகரன் அவர்கள் தனது தாயின் ஆண்டுத் திவசத்தை பல்வேறு சமூகப் பங்களிப்புடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக ஒழுங்குபடுத்தி செய்து தரும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க
வவுனியா பாலாமைக்கல் கிராமத்தில் வசிக்கும் பாலர் மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முன்னதாக அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் திவசத்தை அனுஸ்டிக்கும் முகமாக கூமாங்குளம் கிராமத்தில் அம்மன் கோயில் அருகாமையில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட வீட்டில் வயோதிபத் தாய் தந்தையர்களை ஒன்று கூட்டி விசேட மதிய உணவுகள் வழங்கப்பட்டு திவச விரதம் அனுஸ்டிப்பட்டது. கூமாங்குளம் கிராமத்தில் வாழும் வயோதிபர்கள் உட்பட வேறு சிலரும் அன்னாரின் திவச நிகழ்வில் கலந்து கொண்டு விசேட மதிய உணவு நிகழ்விலும் கலந்து கொண்டனர். சில வயோதிபர்கள் முதுமை காரணமாக நடந்து வர முடியாமல் இருப்போருக்கு விசேட உணவை பொதி செய்து அவர்களுடைய வீட்டுக்கு கொண்டு சென்று வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் “கல்விக்கு கரம் கொடுப்போம்” நிகழ்ச்சி திட்டத்தின் ஒருபகுதியாக கொரோனா தொற்று நோய் காரணமாக பாடசாலைகள் கற்றல் நடவடிக்கைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையில் சிறுவர்களின் கற்றல் நடவடிக்கையினை ஊக்குவிக்கும் முகமாக பாலாமைக்கல கிராமத்தில் வசிக்கும் முன்பள்ளி சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வாறான தாயக உறவுகளின் தேவைகளை உணர்ந்து சமூகப் பங்களிப்பினை தனது தாயாரின் திவசத்தை முன்னிட்டு வழங்கி வைத்த அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் ஆத்மா சாந்திபெற “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” இறைவன வேண்டிக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
18.05.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.