;
Athirady Tamil News

அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களது சிரார்த்த திவச நாளில், விசேட மதிய உணவு வழங்கல்.. (வீடியோ படங்கள்)

0

அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களது சிரார்த்த திவச நாளில் விசேட மதிய உணவு வழங்கல்.. (வீடியோ படங்கள்)

அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களது சிரார்த்த திவச நாளில் விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.
###################################

வேலணையைச் சேர்ந்த அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களது 24 ஆம் ஆண்டு திவச திதியினை முன்னிட்டு வருடந்தோறும் அனுஸ்டிக்கப்படும் திதி வழிபாட்டுப் பூசையும், விசேட மதிய உணவு வழங்களும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இன்றைய நாளில் வவுனியா கூமாங்குளம் கிராமத்தில் நடைபெற்றது..

அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களது வருடாந்த சிரார்த்த திவச திதியினை முன்னிட்டு அன்னாருடைய மகனும் சமயத் தொண்டரும், சமூக ஆர்வலருமான சுவிஸ் நாட்டில் வாழும் திரு சுதாகரன் செல்வி குடும்பத்தினர் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” கேட்டுக் கொண்டதிற்கிணங்க வவுனியா கூமாங்குளம் கிராமத்தில் மேற்படி நிகழ்வு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு திவச மதிய உணவு வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு இணைந்து இவ்வாறான விசேட தினங்களில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகின்ற சுவிஸ் நாட்டில் வாழும் திரு திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில், அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களது சிரார்த்த திவச தின நிகழ்வுகள் வவுனியா கூமாங்குளம் கிராமத்தில், தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்ட பயணத் தடை மற்றும் கொரோனா தொற்றுநோய் அவசரகால நிலைக்கும் மத்தியிலும் கூமாங்குளம் கிராமத்தில் இதற்கென ஒழுங்குபடுத்தப்பட்ட இல்லத்தில் கிராமத்தில் வாழும் வயோதிபத் தாய் தந்தையர்களை அழைத்து அமரத்துவமடைந்த தனது தாயாரான சீவரத்தினம் கனகம்மா அவர்களது திவச நினைவாக விசேட மதிய உணவிணை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஊடாக வழங்கினார் சுவிஸ் சுதாகரன் அவர்கள்.

கூமாங்குளம் கிராமத்தில் வாழும் வயோதிபர்கள் உட்பட வேறு சிலரும் அன்னாரின் திவச நிகழ்வில் கலந்து கொண்டு விசேட மதிய உணவு நிகழ்விலும் கலந்து கொண்டனர். சில வயோதிபர்கள் முதுமை காரணமாக நடந்து வர முடியாமல் இருப்போருக்கு விசேட உணவை பொதி செய்து அவர்களுடைய வீட்டுக்கு கொண்டு சென்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களது வருடார்ந்த சிரார்த்த திவச நாள் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் அன்னையினை வணங்கி மனநிறைவோடு தமதில்லம் திரும்பினர்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

16.05.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.