;
Athirady Tamil News

லண்டன் “ஆனந்தன் கிரிஷா” தம்பதிகளின் திருமண நாளில், உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள்)

0

லண்டன் ஆனந்தன் கிரிஷா தம்பதிகளின் திருமண நாளில், உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள்)

லண்டன் ஆனந்தன் கிரிஷா தம்பதிகளின் திருமண நாளில் உலருணவுப் பொதிகள் வழங்கியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
###################################

லண்டனில் வசிக்கும் திரு திருமதி ஆனந்தன் கிரிஷா தம்பதிகளின் திருமண நாளாகிய இன்று கொரோனா தொற்றுநோய் காரணமாக தொழில் வாய்ப்பினை இழந்து சொல்லொனாத் துன்பங்களை சந்திக்கும் குடும்பங்களுக்கு கிராம சேவையாளர்களின் அறிவுறுத்தல்களுக்கமைவாக நெளுக்குளம், பாலாமைக்கல் என்னும் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

புங்குடுதீவைச் சேர்ந்த அமரர்கள் சொக்கர் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரான லண்டனில் வதியும் ஆனந்தன் கிரிஷா தம்பதிகளின் இன்றைய திருமணநாளை முன்னிட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட்டது..

முன்னதாக எமது “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” உறுப்பினர்களில் ஒருவரும், கிராமிய சமுர்த்தி சங்கத்தின் தலைவியும், சிவில் பாதுகாப்பு உறுப்பினருமான திருமதி பவளம் அவர்களின் சிபார்சுடன் கிராம உத்தியோகத்தர் அவர்களின் ஒத்துழைப்புடன் மிகவும் இக்கட்டான நிலையில் வாழ்கின்றவர்களுக்கான அவசர உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கொரோனா தொற்று நோய் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வாழும் மக்களுக்கு தொடர்ந்து தன்னாலான உதவிகளை “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” செய்து வருகிறது.

அந்த வகையில் இன்றைய நாளில் திருமண பந்தத்தில் இணைந்த நம்தேசத்து உறவுகளான புங்குடுதீவைச் சேர்ந்த அமரர்கள் சொக்கர் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரான லண்டனில் வதியும் ஆனந்தன் கிரிஷா தம்பதிகளின் இன்றைய திருமணநாளை முன்னிட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பில் வழங்கப்படடது.

இன்றைய நாளில் திருமணநாளை தாயக சொந்தங்களுக்கு உதவி வழங்குவதன் மூலம் கொண்டாடும் உறவுகளான லண்டனில் வசிக்கும் திரு.திருமதி. ஆனந்தன் கிரிஷா தம்பதிகளை தாயக உறவுகளோடு, “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” வாழ்க வளமுடன் என வாழ்த்தி மகிழ்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

03.06.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.