;
Athirady Tamil News

பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள், பயன்தரு தென்னை மரங்கள்” வழங்கல்.. (வீடியோ, படங்கள்)

0

பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள், பயன்தரு தென்னை மரங்கள்” வழங்கல்.. (வீடியோ, படங்கள்)
###################################

புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும், பிரான்ஸ் நாட்டில் வசிப்பவர்களான திரு.திருமதி. சஸ்பாநிதி ஜெயக்குமாரி தம்பதிகளின் செல்வப் புதல்விகளில் ஒருவரான செல்வி.மேகலா அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு, அவர் விரும்பிக் கேட்டுக் கொண்ட வகையில் மாணவ மாணவிகளான சிறுவர்களுடன் இணைந்து இனிய பிறந்தநாள் கொண்டாட “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஏற்பாடு செய்தது.

செல்வி. மேகலாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு வவுனியா எல்லைக் கிராமமொன்றில் உள்ள மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு” தெரியப்படுத்தியதன் அடிப்படையில் அந்த குழந்தைகளின் தேவையை, தங்கள் மகளின் பிறந்தநாளில் நிறைவேற்றி வைக்கும்படி செல்வி.மேகலாவின் பெற்றோர்களான திரு.திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி தம்பதிகள் நிதிப்பங்களிப்பு செய்துள்ளார்கள். செல்வி. மேகலா அவர்கள் தனது பெற்றோர், அக்கா கௌசி, தம்பி பாபுஜி ஆகியோருடன் இணைந்து இன்றையதினம் சிறப்பாகக் கொண்டாடினார்.

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சேவைகளை சமூக வலைத் தளங்களில் பார்வையிட்ட வன்னியின் பல எல்லைக் கிராமங்களைக் கொண்ட கிறிஸ்தவகுளம் பிரதேசத்தை சேர்ந்த திருமதி.இந்திரகுமார் புஷ்பலதா, மற்றும் செல்வன் சஜிகாந்த் ஆகியோர் தம்மை மாணிக்கதாசன் பவுண்டேசனுடன் இணைத்துக் கொண்டு சேவையாற்ற விரும்பிக் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க, அவர்களின் முதல்முயற்சியாக கிறிஸ்தவகுளம் வர்சனக்குளம் பிரதேசத்தில் திருமதி.பாக்கியராஜ் புஷ்பவதி அவர்களின் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

செல்வி.மேகலா சஸ்பாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பெற்றோரின் நிதிப் பங்களிப்பில், வவுனியா கிராமமொன்றில், கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்துப் பாடி கொண்டாடப்பட்டதுடன், கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாலைநேர வகுப்புக்கு செல்லும் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், அக்கிராம மக்களின் விருப்பத்துக்கு இணங்க மிகப்பெரிய பயன்தரு நல்லின தென்னை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

அந்த வகையில் தான் மாணவ மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்கும், அங்கே பயிலும் குழந்தைகளின் எதிர்கால கல்வி விருத்திக்கும் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இவ்வாறான நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி கொடையாளிகளின் நிதிப் பங்களிப்போடு அனுசரணை செய்து வருகிறது.

நாளை தமிழ் சிங்கள வருடப் பிறப்பாக இருந்தாலும் அனைத்து மாணவர்களுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டு செல்வி. மேகலாவின் பிறந்த தினத்தைக் கொண்டாடியது விசேடமானது, இதேவேளை பயன்தரு நல்லின தென்னை மரக்கன்றுகளை பெற்றுக் கொண்ட வயோதிபப் பெண்மணி ஒருவர் “தாம் மேகலாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் நினைவில் இதனை வளர்ப்போம் என” பெருமையுடன் சொன்னது சிறப்பம்சமாகும்.

அந்தவகையில் இன்றைய நாளில் பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வி மேகலா அவர்ளை “சகல கலைகளும் பெற்று, நீண்ட ஆயுளுடன் தேக ஆரோக்கியமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென” மாணவ மாணவிகளுடன் நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்களுடன் “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” வாழ்த்துகிறது. அத்துடன் தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக நிதிப் பங்களிப்பினை வழங்கி வருவதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
13.04.2023

பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள், பயன்தரு தென்னை மரங்கள்” வழங்கல்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.