;
Athirady Tamil News

மகா விகாஸ் அகாடி கூட்டணி வலுவாக உள்ளது: நானா படோலே!!

0

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவார்க்கர் குறித்து சமீபத்தில் பேசியதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்தது. அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதாவும் விவசாய விளைபொருள் சந்தை குழு தேர்தலில் இணைந்து போட்டியிட்டதை காங்கிரஸ் கட்சி விமர்சித்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவானும் தேசியவாத காங்கிரசை விமர்சித்து இருந்தார். இதனால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே நேற்று கூறியதாவது:- மகா விகாஸ் அகாடி கூட்டணி பலமாக உள்ளது.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்திப்பு குறித்து ஊகங்களின் அடிப்படையில் கேள்விகளை எழுப்ப தேவையில்லை. மகா விகாஸ் அகாடி தலைவர்கள் ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்திக்கிறார்கள். மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளிடையே நல்லிணக்கம் இருக்கிறது. கூட்டணி பிரபலமடைந்து வருவதைக் கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. அதனால் தான் மகா விகா விகாஸ் அகாடி கூட்டணியில் பிளவுகள் இருப்பதாக வதந்திகள் பரப்பப்படுகிறது. எனவே தான் நாக்பூரில் நடத்த உள்ள பொதுகூட்டத்தை தடுக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது.

சத்ரபதி சாம்பாஜி நகரில் மகா விகாஸ் அகாடி நடத்திய கூட்டத்திற்கு பிறகு மாநிலம் முழுவதும் இதுபோன்ற பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். ஏப்ரல் 16-ந் தேதி அன்று திட்டமிட்டபடி நாக்பூரில் பொதுகூட்டம் நடைபெறும். அதைத்தொடர்ந்து அமராவதி, புனே, கோலாப்பூர், நாசிக் மற்றும் மும்பையில் கூட்டணி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.