;
Athirady Tamil News

நெடுந்தீவு அமரர் லிங்கநாதன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தில், பல்வேறு உதவிகள் வழங்கல் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

0

நெடுந்தீவு அமரர் லிங்கநாதன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தில், பல்வேறு உதவிகள் வழங்கல் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
################################

நெடுந்தீவைச் சேர்ந்தவரும், பெரியதம்பனையில் ஆரம்பத்தில் வாழ்ந்து, இறுதியாக வவுனியா திருநாவற்குளம் பிரதேசத்தில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர் பெருமைனார் லிங்கநாதன் அவர்களது பத்தாம் ஆண்டு சிரார்த்த ஆண்டுத் திவசத்தை முன்னிட்டு அன்னாரின் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் சார்பாக அன்னாரின் மகனும் பிரான்ஸ் நாட்டில் வாழ்பவருமான திரு.தயாளன் அவர்கள் தனது தந்தையின் பத்தாம் ஆண்டுத் திவசத்தை விசேட அன்னதான நிகழ்வுடன், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக ஒழுங்குபடுத்தி செய்து தரும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரின் முழுமையான நிதிப் பங்களிப்பில் மேற்படி அன்னதான நிகழ்வு நடத்தப்பட்டது.

கடந்த எடடாம் திகதி மதியம், “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” அமரர் பெருமைனார் லிங்கநாதன் அவர்களது 10 ஆம் ஆண்டு சிரார்த்த ஆண்டுத் திவசத்தை முன்னிட்டு முதல் நிகழ்வாக வவுனியா பாரதிபுரம் தமிழ் கலவன் பாடசாலை மாணவச் செல்லங்களுடன் இணைந்து அவரது நினைவாக விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது வவுனியா பாரதிபுரம் தமிழ் கலவன் பாடசாலை மாணவச் செல்வங்களுடன் இணைந்து நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்றையதினம் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், அன்னாரின் நினைவாக பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது வவுனியா செல்வா நகர் செக்கட்டி புலவு பிரதேசத்தில் செல்வா சுப்பர் போய்ஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் தலைமையில் அப்பிரதேச சமுர்த்தி தலைவர் செல்வகுமார் கிரிசாந்தன், சமுர்த்தி பொருளாளர் சாந்தன் சசிகலா, விளையாட்டு கழக செயலாளர் அருள் ராஜா அஜந்தன்,.விளையாட்டு கழக உறுப்பினர் பத்தி நாதன் பகிரதன் ஆகியோர் விருந்தினராகக் கலந்து கொள்ள சிறப்பாக அநடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் அக்கிராம மக்களுடன் பயனாளிகளுக்கு கலந்து சிறப்பித்ததுடன், பத்தாம் ஆண்டு நினைவுதின நிகழ்வில் அமரர் பெருமைனார் லிங்கநாதன் அவர்களுக்கு முதலில் ஒரு நிமிட மௌன வணக்க அஞ்சலி செலுத்தி தொடர்ந்து தேவார பாராயணம் பாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேற்படி பெறுமதியான உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்ட மற்றும் அன்னாரின் நினைவாக பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வானது அமரர் பெருமைனார் லிங்கநாதன் அவர்களின் மனைவி மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள் சார்பாக அன்னாரின் மகனான பிரான்சில் வசிக்கும் திரு.தயாளன் அவர்களின் முழுமையான நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட்டது. மேற்படி தயாளன் கழகத்தின் பிரான்ஸ் கிளையின் நிர்வாகப் பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வுக்காக நிதிப் பங்களிப்பு வழங்கிய திரு.தயாளன் உட்பட அமரர் லிங்கநாதன் அவர்களின் குடும்பத்துக்கும், இதனை முன்னின்று நெறிப்படுத்தும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கும்” கலந்து கொண்ட அப்பாடசாலை அதிபர், ஆசிரியைகளினால் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” இன, மத, பிரதேச வேறுபாடுகளை மட்டுமல்ல அரசியல் வேறுபாடுகளையும் கடந்து நடுநிலைமையுடன் அனைத்து மக்களையும் வாழ்வாதாரத்தில் முன்னேற்றவும், மற்றும் மாணவ மாணவிகளின் கல்விக்கு கரம் கொடுக்கவும் வேண்டுமெனும் ஒரே நோக்கில் செயல்பட்டு வருவதும், அதன் உயரிய நோக்கமாக “தடைகளைத் தகர்த்து சமூகத்தை உயர்த்து” எனும் குறிக்கோளில் செயலாற்றுவது நீங்கள் அறிந்ததே..

மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தாயக சொந்தங்களோடு இணைந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, இறையடி சேர்ந்த அமரர் பெருமைனார் லிங்கநாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் எந்நாளும் இறைவனை இறைஞ்சு வேண்டுகிறோம்.

“நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்”.. என்றும்
“மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
12.07 2023.

நெடுந்தீவு அமரர் லிங்கநாதன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தில்பல்வேறு உதவிகள் வழங்கல் நிகழ்வு.. (வீடியோ)

நெடுந்தீவு அமரர் லிங்கநாதன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தில் “விசேட அன்னதான” நிகழ்வு.. (வீடியோ)

நெடுந்தீவு அமரர் லிங்கநாதன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தில், பல்வேறு உதவிகள் வழங்கல் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.