;
Athirady Tamil News

அகவை நாளில், விசேட உதவிகள் வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ் பஞ்சலிங்கம்.. (படங்கள், வீடியோ)

0

அகவை நாளில், விசேட உதவிகள் வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ் பஞ்சலிங்கம்.. (படங்கள், வீடியோ)
##############################

சிரிப்புடன் நீங்கள் சிரமத்தை கடக்கணும்..
சிறப்புடன் நீங்கள் நூறு வருஷம் வாழனும்..

குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீங்கள் வாழ்ந்திட வேண்டும்..

மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..

எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..

வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின்றோம்..

இன்றைய நாளில் புங்குடுதீவில் பிறந்து, சுவிஸ் நாட்டில் லங்கெந்தால் பிரதேசத்தில் வதிக்கும் பஞ்சன் என அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் திரு.வி.அ. பஞ்சலிங்கம் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வானது அவர்களின் குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” வவுனியா எல்லைக் கிராமத்தில் தேவையுடைய கிராம மக்களுக்கு விசேட உதவிகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அமரர்கள் வி.அருணாசலம் சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்புப்புதல்வன் பஞ்சன் என அன்பாக எல்லோராலும் அழைக்கப்படும் திரு.பஞ்சலிங்கம் அவர்களின் பிறந்தநாளினை அவரது மனைவி அன்னாம்பாள், மக்கள் பிரியங்கன், பிரவீன், மருமகள் சுபரீனா மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் கொண்டாடும் அதேவேளை இன்றுகாலை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒழுங்கமைப்பில் வவுனியா எல்லைக் கிராமத்தில் வாழ் சிறுவர், சிறுமிகளோடு கேக் வெட்டி மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டது.

திரு.பஞ்சலிங்கம் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வினை அவரது குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் தாயக உறவுகளுக்கான பெறுமதியான உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதியும், பயன்தரு நல்லின தென்னை மரக்கன்றுகளும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கப்பட்டு சிறப்பான ஒழுங்கமைப்பில் கொண்டாடப்பட்டது. இவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறுவர்களால் கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப் பாடி விமர்சையாக கொண்டாடப்பட்டது.

பல சிறுவர் சிறுமியர்கள், அவர்களின் பெற்றோர், அக்கிராமத்தவர்களென பலரும் கலந்து கொண்டு இவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்கள். நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு உட்பட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.

இதேவேளை இன்றுமதியம் பிறிதோர் கிராமத்தில் விசேட சைவ உணவு வழங்கி வைக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய நிகழ்வைத் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு உள்ள சிலருக்கும் வீடு தேடித் சென்று பெறுமதியான அரிசிப் பொதிகளும் சிறுதொகைப் பணமும் வழங்கி வைக்கப்பட்டது விசேட சிறப்பம்சமாகும்.

மேற்படி நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் தலைமையில், கிராம மக்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.

அந்தவகையில் இன்றைய நாளில் திரு.பஞ்சலிங்கம் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தோடு பிறந்தநாளை நிறைவு செய்யாமல் வாழ்வாதார நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோர், வயோதிபர்கள், நாளாந்த வருமானத்தை இழந்து தனித்து வாழ்வோர் என பலதரப்பட்ட சூழ்நிலையில் வாழ்வோருக்கு பெறுமதியான உலருணவுப் பொதிகளும், பயன்தரு நல்லினத் தென்னை மரக்கன்றுகளும் வழங்கப்பட்டமை அனைவராலும் பாராட்டப்பட்டது.

இன்றைய நாளில் இனிய பிறந்த நாளைக் கொண்டாடும் திரு.பஞ்சலிங்கம் அவர்களை “பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென” மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு இணைந்து வாழ்த்துகிறது.

அத்தோடு மேற்படி நிகழ்வுக்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய திரு.பஞ்சலிங்கத்தின் குடும்பத்துக்கு மனமார்ந்த நன்றிகளையும் பயனாளர்களுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

11.08.2023

ஐம்பதாவது அகவை நாளில், விசேட உதவிகள் வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ் பஞ்சலிங்கம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.