;
Athirady Tamil News

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!!

0

பண்டிகைக் காலத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தேவையான அளவு எரிபொருள் நாட்டிற்கு கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 2 லட்சத்து 65 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை இந்த மாதத்தில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேவையற்ற வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடிநிற்க வேண்டாம் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் கொள்கலன்களில் எரிபொருள் விநியோகிப்பது பற்றி எதிர்காலத்தில் ஒழுங்கு விதி ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க மேலும் தெரிவித்தார்.

வீடுகளிலும் வேறு இடங்களிலும் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்படும் டீசல், பெற்றோல் போன்ற எரிபொருட்களால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன என்றும் தெரிய வருகிறது. வீடுகளிலுள்ள மண்ணெணணை மற்றும் டீசல் தாங்கிகளுடன் கலக்க கூடிய வாய்ப்பு இருப்பதாக, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நிலைமை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.