;
Athirady Tamil News

இலங்கையின் தேசிய மலர் குறித்து வௌியான உண்மை!!

0

இலங்கையின் தேசிய மலர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு சுற்றாடல் அமைச்சுக்கு பொதுக் கணக்குக் குழு (கோபா) அறிவுறுத்தியுள்ளது.

அதாவது தேசிய கல்வி நிறுவனம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய மலர் தொடர்பில் பாடசாலைகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அது உரிய வகையில் இடம்பெறவில்லை என கோபா குழு அவதானித்துள்ளது.

எனவே, 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின்படி, இலங்கையின் தேசிய மலர் ´அல்லிப்பூ´ என அமைச்சிற்கு கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் பிற அரச நிறுவனங்களுக்கு தெரிவிக்க போதிய விளம்பரம் செய்ய அமைச்சகம் தவறியுள்ளதால், இலங்கையின் தேசிய மலராக இன்றும் ´நீலோற்பலம்´ என பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுவதை கோபா குழு அவதானித்துள்ளது.

பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவினால் இன்று (20) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கோபா குழுவின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் முதலாவது அறிக்கையிலேயே இந்த உண்மைகள் இடம்பெற்றுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.