;
Athirady Tamil News

புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் 30 நாள் தேனிலவு விடுமுறை; பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த சீனா புது யோசனை..!!

0

சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தும் வகையில் புதுமண தம்பதிகளுக்கு தேனிலவு விடுமுறையை ஒரு மாதமாக அதிகரித்து சில மாகாண அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீன அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கை காரணமாக அந்நாட்டில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஆயிரம் தம்பதிகளில் வெறும் 6.77 பேருக்கு மட்டுமே குழந்தை பிறப்பதாக தெரியவந்தது. இதையடுத்து திருமணத்தை ஊக்குவிக்கவும், பிறப்பை விகிதத்தை அதிகப்படுத்தவும் கான்சூ, ஷாங்ஸி உள்ளிட்ட மாகாண அரசுகள் அதிரடி முடிவை எடுத்துள்ளன.

அதன்படி திருமணம் முடித்த புதுமண தம்பதிகளின் விடுமுறையை ஒரு மாதமாக அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. சம்பளத்தோடு கூடிய விடுப்பாக கருதப்படும் என்றும் மாகாண அரசுகள் தெரிவித்துள்ளன. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்டிருந்த சீனாவில், 1980 மற்றும் 2015க்கு இடையில், மக்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையை அமல்படுத்திய பிறகு சீனாவின் மக்கள்தொகை கணிசமாக குறைந்துள்ளது. 2022ம் ஆண்டில், சீனாவில் மிகவும் குறைந்த பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே மக்கள் தொகையை அதிகரிக்க சீனா புது திட்டம் தீட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.